Home /News /tamil-nadu /

சொந்த பந்தங்களையும், சொம்பு தூக்குபவர்களையும் துணைவேந்தராக்க திட்டமா? மு.க. ஸ்டாலினை கடுமையாக சாடிய கிருஷ்ணசாமி

சொந்த பந்தங்களையும், சொம்பு தூக்குபவர்களையும் துணைவேந்தராக்க திட்டமா? மு.க. ஸ்டாலினை கடுமையாக சாடிய கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

துணைவேந்தர் நியமனங்களைப் பொன் முட்டையிடும் வாத்துகளாக மாற்றி அதில் கோடி கோடியாக வாரிக்குவித்து ஊழல் குப்பை மேடுகளாக பல்கலைக்கழகங்களை மாற்ற வேண்டும் என்று திமுக அரசு முயல்வதாக கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

  ஊழலற்ற, நேர்மையான முறையில் நல்ல கல்விமான்களைத் துணைவேந்தர்களாக நியமிக்கும் சரியான பணியைத் தமிழக ஆளுநர்கள் சுயமாகச் செய்து வருகிறார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்றைய திமுக அரசு துணைவேந்தர் நியமனங்களைச் சீர்குலைத்து அதையும் அபகரிக்கத் திட்டமிடுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

  இது தொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும் பங்கு இருக்க வேண்டும்; அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கடந்த 06.01.2022 அன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்கள்.  இந்த அறிவிப்புகளை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், அந்த அறிவிப்பு இலட்சோபலட்சம் உயர்கல்வி பயிலும் ஏழை, எளிய, கிராமப்புற தமிழக மாணவர்களின் வாழ்க்கையோடு சமந்தப்பட்டது.

  துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநர்கள் மூலமாக நடைபெற்று வந்தாலும் நடைமுறையில் மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்களுடைய விருப்பமே அதில் இறுதி வடிவம் பெறுகிறது. துணைவேந்தர்களை நியமிக்க மூன்று பேர் கொண்ட தேர்வுக் கமிட்டியை (select committee) நியமிக்கும் பொறுப்பைக் கூட ஆளுநர்கள் சுயமாக நியமிக்க முடியாமல் மாநில அரசுகள் கொடுக்கும் பெயர்களை மட்டுமே ஆளுநர்கள் பரிந்துரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சூழல்களும் உண்டு.

  தமிழகத்தில் 50 வருடங்களாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்கள் சாதி, மத, ஊழல், சொந்த பந்த சகதிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஏலத்தில் எடுப்பதைப் போல அதிக தொகை தர முன் வருவோருக்கே துணை வேந்தர் பதவிகள் வழங்கப்பட்டு வந்தன. துணைவேந்தர் நியமனத்திற்கு ரு 10 கோடி முதல் ரூ15 கோடி வரையிலும் பேரம் பேசப்பட்ட காலம் உண்டு.

  இதையும் படிங்க: ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்ன இயங்கும்? என்ன இயங்காது? முழு விபரம்


  ஆராய்ச்சியின் இருப்பிடமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு ’பட்டம்’ அளிக்கும் ஒரு சாதாரண நிறுவனமாகவே குறுகிப் போய்விட்டன. ’வேலியே பயிரை மேய்ந்தது’ என்பதற்கு இணங்க கல்வியின் கோபுரமாக விளங்கக்கூடிய பல்கலைக்கழகங்களே ஊழல் குப்பை மேடுகளாக மாறின.  தொலைத்தூரக் கல்வி மற்றும் வினாத்தாள் திருத்துதல் போன்றவற்றிலும் ஊழல்கள் தலை விரித்தாடின. பி.எச்.டி பட்டங்களையும், டி.லிட் பட்டங்களையும் கூட வேண்டியவர்களுக்கும், காசு பணத்திற்கும் வழங்கினார்கள். பல கல்லூரி பேராசிரியர்களே பாலியல் புகார்களுக்கு ஆளாகினார்கள்.

  துணைவேந்தர் நியமனத்தில் முழு பங்கையும் கடந்த 50 வருடங்களாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். கடந்த இரண்டு வருடங்களாக மட்டும்தான் அந்த நிலை முற்றாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஊழலற்ற, நேர்மையான முறையில் நல்ல கல்விமான்களைத் துணைவேந்தர்களாக நியமிக்கும் சரியான பணியைத் தமிழக ஆளுநர்கள் சுயமாகச் செய்து வருகிறார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்றைய திமுக அரசு துணைவேந்தர் நியமனங்களைச் சீர்குலைத்து அதையும் அபகரிக்கத் திட்டமிடுகிறது.

  மேலும் படிக்க: பொங்கலுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்... முழு விபரம்


  திமுக அரசின் நோக்கங்கள் தெளிவாகத் தெரிகிறது. தங்கள் குடும்பத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லாத எஞ்சி இருக்கக்கூடியவர்களை இது போன்ற உயர் பதவிகளில் அமர வைக்க வேண்டும்; இரண்டாவது, மீண்டும் துணைவேந்தர் நியமனங்களைப் பொன் முட்டையிடும் வாத்துகளாக மாற்றி அதில் கோடி கோடியாக வாரிக்குவித்து ஊழல் குப்பை மேடுகளாக பல்கலைக்கழகங்களை மாற்ற வேண்டும் என்பதுதான்.

  ஆளுநர்களை அகற்றிவிட்டு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை திமுக அரசே தன் வசப்படுத்திக் கொண்டு ஸ்டாலின் அவர்களின் சொந்த பந்தங்களையும், உற்றார் உறவினர்களையும், தனது கட்சிக் காரர்களையும், சொம்பு தூக்குபவர்களையும் துணைவேந்தர்களாக தாங்களாகவே நியமனம் செய்து கொண்டால் கோடான கோடி தமிழக ஏழை, எளிய, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

   

  பல்கலைக் கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து பறிக்கும் திமுக அரசின் இந்த மோசமான உள்நோக்கத்தை அறிவார்ந்த தமிழ் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது . அரசியல் கூட்டணி என்பது தவிர்க்க இயலாதது தான். ஆனால், கூட்டணி என்பதற்காக எந்த தவறுகள் செய்தாலும்; முறைகேடுகள் செய்தாலும் அவற்றை நியாயப்படுத்துவது என்பது ’அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும்’ என்பதற்கு இணங்க திமுகவின் இதுபோன்ற தவறுகளைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு அது கேடாகவே முடியும்.

  மேலும் படிக்க: தண்ணீர் திருட்டில் சிக்கும் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு


  பல்கலைக்கழகங்கள் நேர்மையாகச் செயல்பட வேண்டுமென்றால் அதை நிர்வகிக்கக் கூடிய துணைவேந்தர்கள் நியமனங்கள் நேர்மையாக நடைபெற வேண்டும். அவர்களுடைய நியமனங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே, அவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.எனவே, இதையெல்லாம் புரியாமல் மக்கள் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ’மாநில சுயாட்சி’ என்ற பெயரில் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களின் அதிகாரங்களைப் பறித்து பல்கலைக்கழகங்களை கழக குடும்பச் சொத்தாக மாற்ற எத்தனிப்பார்களேயானால் அதுவே திமுக அரசை தமிழக மக்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றி அவர்களை வீட்டுக்கு அனுப்பும் பணிகளுக்கான துவக்கமாக அமையலாம்’ என்று விமர்சித்துள்ளார்.

   
  Published by:Murugesh M
  First published:

  Tags: Dr Krishnasamy, MK Stalin, University vise chancellor, Vice chancellor

  அடுத்த செய்தி