Home /News /tamil-nadu /

துணைவேந்தர் மசோதா: காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது

துணைவேந்தர் மசோதா: காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது

துணைவேந்தர் மசோதா

துணைவேந்தர் மசோதா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, காங்கிரஸ் உறுப்பினர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்ட நிலையில், வெளிநடப்பு செய்வதற்கு காரணம் தேடி கொண்டு இருப்பதாக அதிமுகவை குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்டதிருத்த மசோத காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். அப்போது ஆரம்ப நிலையிலே எதிப்பு தெரிவிப்பதாக அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இதை தொடர்ந்து பாஜக உறுப்பினர் நயினார் நகேந்திரன், ஆரம்ப நிலையிலே எதிப்பு தெரிவிப்பதோடு, வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.

அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயர்கல்வி துறை அமைச்சரும் இருப்பதால், கொள்கை முடிவு எடுக்ககூடிய அரசுக்கு பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதில் அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர்கல்வி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவதாக தெரிவித்தார்.

மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது, பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துவதோடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டு பேசினார். அதோடு, மாநில அரசினுடைய உரிமை தொடர்பான பிரச்சினை என்றும், மாநில பல்கலைக்கழக கல்வி உரிமை தொடர்பான பிரச்சினை, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசின் உரிமை என்பதால் சட்டமுன்வடிவை ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: துணைவேந்தர் நியமனம்.. மாநில அரசை ஆளுநர் மதிப்பதில்லை: மு.க.ஸ்டாலின்


இதை தொடர்ந்து சட்டமசோதா தொடர்பாக விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், மாநில உரிமைகளை மீட்பதற்கு முதலமைச்சர் மேற்கொள்ளும் முயற்சியை வரவேற்பதோடு இந்த மசோதாவை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

மேலும், மற்ற மாநிலங்களில் இருந்து வரும் ஆளுநரால்  புரிந்த கொள்ளமுடியுமா என்றும், பட்டி தொட்டி எல்லாம் தெரியும் முதல்வரால் புரிந்தகொள்ளமுடியுமா என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

இந்த சட்டமசோதாவை வரவேற்றாலும், வேளாண் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முதலமைச்சர் தான் இருக்கவேணடும் என்று மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.

மேலும் படிக்க: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம்... சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி சட்ட முன்வடிவு தாக்கல்


இதே போன்று பேசிய விசிக உறுப்பினர் சிந்தனைச்செல்வன், கடந்த நான்கு ஆண்டுகளாக ஆளுநரால் நியமிக்கப்பட் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு நீதி விசாரணை நடத்தவேண்டும் என்றார். மேலும், உதகை மண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையை திரும்ப பெறுவததோடு, அமைச்சர்களுக்கு பசுமை வெளி சாலையில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது போல ஆளுநருக்குக்கும் ஒதுக்கவேண்டும் என்றார்.

ஆளுநர் இரட்டை ஆட்சியை முறையை நடத்த முயற்சி செய்கிறார் என்றும், ஆளுநரை முதலமைச்சர் கன்னியமாக நடத்துவதாக செல்வபெருந்தகை குறிப்பிட்டார்.

மேலும், அதிமுக ஆரம்ப கட்டத்தில் எதிர்ப்பது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியதோடு, துணை வேந்தர்  நியமனம் தொடர்பாக அதிமுக ஆட்சியில் பல்வேறு ஆதரவு கருத்துகளை மறைந்த முன்னாள் முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார் என்றார்.

இதை படிக்க: டேபிளை உடைத்து அட்டகாசம் செய்த அரசு பள்ளி மாணவர்கள் மீது வேலூர் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை...


மறைந்த முதலமைச்சர் பெயரை குறிப்பிட்டு செல்வபெருந்தகை பேசியதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பியதால் பேரவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது அதிமுக உறுப்பினர்களின் செயல்களை குறிப்பிட்டதோடு, சபாநாயகர் பேச்சை கேட்காததால் அவை காவலர்கள் மூலமாக வெளியேற்றுவதற்கு அவை முன்னவர் துரைமுருகன் வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், காங்கிரஸ் உறுப்பினர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்ட நிலையில், வெளிநடப்பு செய்வதற்கு காரணம் தேடி கொண்டு இருப்பதாக அதிமுகவை குறிப்பிட்டார். இதை தொடர்ந்து அவை குறிப்பில் இருந்து நீக்கபடுவதாக தெரிவித்தாலும், ஏற்புடையதாக இல்லை என்று கூறி அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டமசோதாவிற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்து பேசினார். இதை தொடர்ந்து சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது வெளிநடப்பு செய்து விட்டு அதிமுக உறுப்பினர்கள் பேரவைக்கு வந்தனர். மேலும், எதிர்கட்சி துணைத்தலைவர் ஒ.பன்னீர்செல்வம் அவையில் நடைபெற்ற நிகழ்விற்கு தான் வெளிநடப்பு செய்வதாக கூறி, சட்ட மசோதா சரத்து குறித்து பேச முற்பட்டார் ஆனால், பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்றும், நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா குறித்து இனி பேசமுடியாது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்
Published by:Murugesh M
First published:

Tags: TN Assembly, University vise chancellor

அடுத்த செய்தி