Home /News /tamil-nadu /

Today Tamil Top News : இந்திய கடற்படை புதிய தளபதி இன்று பதவியேற்பு

Today Tamil Top News : இந்திய கடற்படை புதிய தளபதி இன்று பதவியேற்பு

உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்

    இந்திய கடற்படை புதிய தளபதி இன்று பதவியேற்பு : இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஹரி குமார் இன்று பதவியேற்கிறார். தற்போதைய தளபதியாக இருக்கும் கரம்பீர் சிங், இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய தளபதியாக ஹரி குமார் நியமிக்கப்படுவதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இன்று ஹரி குமார் பதவியேற்றுக் கொள்கிறார்.

    பள்ளி, கல்லூரி விடுமுறை : கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    முல்லைப் பெரியாறு அணை திறப்பு : முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியதை அடுத்து உபரி நீதி திறக்கப்பட்டதால், கேரளாவில் இடுக்கி கரையோர பகுதி மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "ரூல் கர்வ்" முறைப்படி நவம்பர் 30ம் தேதியான இன்று முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்க வேண்டும், அதேநேரம், போதுமான மழையும் கேரளாவில் பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பான்மையான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12 எம்பிக்கள் சஸ்பெண்ட் : மாநிலங்களவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்த 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டார்.

    டிவிட்டர் புதிய சிஇஓ : ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலகியதை அடுத்து இந்தியரான பராக் அக்ரவால் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். பராக் அக்ரவால் 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார்.

    ஓமைக்ரான் மிகவும் ஆபத்தானது : தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய திரிபான ஓமைக்ரான், உலக அளவில் பரவக் கூடியது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான திரிபுகளை ஒமைக்ரான் கொண்டுள்ளதாகவும், பெருந்தொற்றின் பாதையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

    சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தேர்வு : அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 7-வது முறையாக சிறந்த சர்வதேச கால்பந்து வீரருக்கான விருதை வென்று சாதித்துள்ளார். தற்போது பிரான்சின் பி.எஸ்.ஜி. கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஓராண்டில் தேசிய அணி மற்றும் கிளப் அணிக்காக 56 போட்டிகளில் விளையாடி மெஸ்ஸி, 41 கோல்கள் அடித்துள்ளார். அதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை மெஸ்ஸி முத்தமிட்டார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Headlines

    அடுத்த செய்தி