விஜிபியில் 30 வருடங்கள் சிலை மனிதராக இருந்தவரின் வாழ்வை சிதைத்த கொரோனா

30 வருடமாக சிலை மனிதனாக இருந்தவரை செக்கியூரிட்டி வேலைக்கு அனுப்பியது கொரோனா தொற்று குறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம். 

விஜிபியில் 30 வருடங்கள் சிலை மனிதராக இருந்தவரின் வாழ்வை சிதைத்த கொரோனா
சிலை மனிதன்
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 11:05 AM IST
  • Share this:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாஸ். 60 வயதான இவர் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான விஜிபி யுனிவெர்செல் கிங்டமில் கடந்த 30 வருடங்களாக சிலை மனிதனதாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 1991ம் முதல் சென்னையில் சிலை மனிதனாக பார்க்கப்பட்ட தாஸ் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவும் வரை தன்னுடைய வாழ்க்கையில் தினந்தோறும் 4 மணி நேரம் சிலை மனிதாக மாற்றிக்கொண்டுள்ளார்.  1991ம் ஆண்டு சிலை மனிதனாக மாறிய தாஸின் அப்பொழுதிய மாதம் ஊதியம் 600 ரூபாய்.  600 ரூபாயில் துவங்கி கடந்த 30 வருடத்தில் 8,400 ரூபாய் மாத ஊதியமாக வாங்கி வந்துள்ளார். சாதாரன மனிதரால் சிலை மனிதனாக மாறுவது சாத்தியமில்லாத ஒன்று.

ஆனால் பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரும் மக்கள் சிலை மனிதனாக நிற்கும் தாஸ்யை சிரிக்க வைக்க பல்வேறு யுக்தியை கையாண்டதாகவும் ஆனால் இதுவரை யாரும் இந்த சிலை மனிதனை அசைத்து கூட பார்த்ததில்லை என தெரிவித்தார்.

சிலை மனிதன் தாஸ்காலை 9:30 மணிக்கு சிலை மனிதனாக மாறும் தாஸ் 4 மணி நேரம் ஆடாமல் அசையால் சிலைபோன்று நிற்பது வழக்கம். இவரைத் தொடர்ந்து மற்றொரு சிலை மனிதர் நண்பகல் 2 மணி முதல் 7 மணி வரை சிலை மனிதராக இருப்பார். தான் சிலை மனிதனாக மாறும் தருணம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் அந்த நேரத்தில் யார் என்ன செய்தாலும் என்னுடைய கவனம் சிதறாமல் நான் சிலையாகவே இருப்பேன் என்றும் தன்னுடைய பணி நேரம் முடிந்ததும் அந்த ஆடையை கழற்றிவிட்டால் நானும் சாதாரன மனிதனாக எல்லோரிடமும் சிரித்து பழகுவேன் என்று கூறினார்.

இப்படி இருக்கும் வேலையில் கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகம் பரவியதால் தமிழக அரசு பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை மூடியது.

நிர்வாகம் விஜிபி பூங்காவை மூடியதால் சிலை மனிதன் தாஸ்க்கு வேலை இல்லாத நிலையில் வீட்டிலிருக்கும் நிலை உருவாகியிருந்தது. கடந்த 5 மாதங்களாக வேலையின்றி வீட்டில் இருந்துவந்த சிலை மனிதன் தாஸ் என்பவர் குடும்ப சூழ்நிலைக்காக வேறு ஒரு வேலையை தேடி சென்ற நிலையில் கடந்த 1ம் தேதியிலிருந்து செக்யூரிட்டி வேலைக்கு செல்கிறார்.சாதாரன மனிதர்களை வாட்டி வதைத்த கொரோனா தொற்று சுற்றுலா பயணிகளால் சிலை மனிதன் என்று அழைத்து வந்தவரையே அசைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading