மறைந்த ஜே.கே.ரித்திஷின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

News18 Tamil
Updated: April 14, 2019, 8:16 AM IST
மறைந்த ஜே.கே.ரித்திஷின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு
News18 Tamil
Updated: April 14, 2019, 8:16 AM IST
நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்திஷின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற உள்ள நிலையில், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக, ஜே.கே.ரித்திஷ் பிரசாரம் செய்து வந்தார். இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே, உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் வீட்டிற்கு வந்தபிறகு நாடித்துடிப்பு இருப்பதாக உறவினர்கள் கூறியதால், மீண்டும் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜே.கே.ரித்திஷின் இறப்பை உறுதி செய்தனர்.

ராமநாதபுரத்தில் வசித்து வந்த ஜே.கே.ரித்திஷூக்கு, ஜோதீஷ்வரி என்ற மனைவியும், அரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர்.

1973ம் ஆண்டு இலங்கையின் கண்டியில் பிறந்த இவர், கானல்நீர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் பெண்சிங்கம், நாயகன், எல்.கே.ஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான எல்.கே.ஜி படத்தில் ஜே.கே.ரித்திஷூன் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.

அரசியலிலும் கோலோச்சிய ரித்திஷ், 2009ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் இருந்து, திமுக சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். பின்னர் 2014ம் ஆண்டில் அக்கட்சியில் இருந்து விலகு, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவரது உடல் ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜே.கே.ரித்திஷின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலக பிரபலங்கள் ஜே.கே.ரித்தீஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...