ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும், சில கல்லூரி மாணவர்கள் தான் உயர்ந்த இடத்திற்கு செல்கின்றனர்’ – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு

‘எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும், சில கல்லூரி மாணவர்கள் தான் உயர்ந்த இடத்திற்கு செல்கின்றனர்’ – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு

செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

கல்லூரியில் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கினால் தான், அவர்களின் பின்னால் வருபவர்கள் அதனை தொடர்வதற்கு வசதியாக இருக்கும். – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி), சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளருக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடந்தது.

  விழாவில், சிறந்த பொது நிர்வாகத்திறனுக்காக விருது, தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. மேலும், அமெரிக்க ராணுவ தலைமை தகவல் தொடர்பு அலுவலர் டாக்டர் ராஜ் ஐயர், அமெரிக்க மருந்து கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு உதவித் தலைவர் டாக்டர் ரங்கநாதன் கோதவர்த்தி,  ஓய்வு பெற்ற அறிவியல் விஞ்ஞானி சீதாராமன் நாராயணன், பேராசிரியர் முரளி சீதாராமன், ஜெயக்குமார், வேதமாணிக்கம், கோபிநாத் கல்லாயில், கருப்பையா, கோவிந்த அய்யர், சேமான் பாமிக் கோபி, சுரேஷ்குமார், ஸ்ரீநிவாஸ் சீனிவாசன், கார்த்திகேயன், கிருஷ்ணசாமி ஆகிய துறை சார்ந்த வல்லுனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

  மேலும், இளம் சாதனையாளர் விருது, பெங்களூரை சேர்ந்த உதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.

  விருதைப் பெற்ற பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது, "நான் படித்த முதல் பொதுத்துறை கல்லூரி இது. இதற்கு முன்னரும், பின்னரும் நான் தனியார் கல்வி நிறுவனங்களில் மட்டுமே படித்துள்ளேன்.

  கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: செல்போனை வழங்க மறுக்கும் பெற்றோர்.. சிபிசிஐடி குற்றசாட்டு..

  கடந்த, 1983ம் ஆண்டு முதல், 1987ம் ஆண்டு வரை, இந்த கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். ஒரு தாய்க்கு கிடைக்க கூடிய பெருமை இந்த கல்லூரிக்கு உள்ளது. அதை நான் நேரடியாக இங்கு அனுபவித்து உள்ளேன்.

  நான் பல இடங்களில் கல்விப் பெற்றிருக்கிறேன். இங்கு போல, மாணவர்களுக்கு வளர்ச்சி, நட்பு, புரிதலை அவர்களுக்குள் உருவாக வேண்டும். பலருக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தர வேண்டும். நான் உருவாக்கி தந்திருக்கிறேன். அவர்களில் பலர் இன்றும் வெளிநாடுகளில் சாதித்து வருகின்றனர்.

  திருச்சியில் நான் படிக்கும் காலத்தில் கல்லூரியில் இருந்து டவுனுக்கு போவதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை என்பதால் நான் திருச்சிக்கு சென்றதில்லை. அதனால் எனக்கு திருச்சியை பற்றி அவ்வளவாக தெரியாது.

  'முதல்வர் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறார். நாங்கள் அவரை தட்டி எழுப்பிகிறோம்'- அண்ணாமலை

  ஆனால், நான் படித்த காலத்தில் இருந்த நிலைமாறி, இக்கல்லூரி சிறப்பானதொரு வளர்ச்சி அடைந்துள்ளது. கல்லூரியில் பல கட்டிடங்கள் உருவாகியுள்ளன.

  எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும், சில கல்லூரி மாணவர்கள் தான் உயர்ந்த இடத்திற்கு செல்கின்றனர். 1964ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரி, அடுத்த, 20 ஆண்டுகளில், அதாவது, 1974 மற்றும், 1981ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் இன்று உலக அளவில் பல துறைகளில் முன்னோடியாக விளங்குவது அதிசயமான விஷயம் தான்.

  இதற்கு கல்லூரியின் துவக்க கால முதல்வர் மணிசுந்தரம் போன்ற தனி நபர்கள் தான் முன்னேற்ற பாதையில் நிறுவனத்தை அழைத்துச் சென்றதும் ஒரு காரணம்.

  கல்லூரியில் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கினால் தான், அவர்களின் பின்னால் வருபவர்கள் அதனை தொடர்வதற்கு வசதியாக இருக்கும். அப்படி இக்கல்லூரியில் உருவாக்கப்பட்ட கலாச்சாரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படுவதால், மிகச் சிறப்பான நிலையை இக்கல்லூரி எட்டியுள்ளது" என்றார்.

  செய்தியாளர் - விஜயகோபால், திருச்சி

  Published by:Musthak
  First published:

  Tags: Minister Palanivel Thiagarajan