ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர் கீதா ஜீவன் சொத்துகுவிப்பு வழக்கு - நாளை தீர்ப்பு

அமைச்சர் கீதா ஜீவன் சொத்துகுவிப்பு வழக்கு - நாளை தீர்ப்பு

அமைசர் கீதா ஜீவன்

அமைசர் கீதா ஜீவன்

1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவன் உட்பட அவரது குடும்பத்தினர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் புதன் கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏவும் அமைச்சர் கீதாஜீவனின் தந்தையுமான என்.பெரியசாமி மீது 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க :  “விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்!

அதில், 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்த என்.பெரியசாமி வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவன் உட்பட அவரது குடும்பத்தினர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நீதிபதி குருமூர்த்தி புதன் கிழமை தீர்ப்பு வழங்கவுள்ளார்.

First published:

Tags: Assets, CM MK Stalin, Disproportionate assets case