தொன்மையான மொழிகள் பேசும் இடங்களில் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது- வெங்கையா நாயுடு

மக்கள் தங்களது தேவைகளை அரசிடம் மட்டுமே எதிர்பார்த்திருக்கக் கூடாது” என்று அறிவுறுத்திய வெங்கைய நாயுடு, சென்னையில் வெள்ளம் வந்த போது தவித்த மக்கள், தற்போது தண்ணீருக்காக தவித்து வருவதாகவும் கவலை தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: July 14, 2019, 2:32 PM IST
தொன்மையான மொழிகள் பேசும் இடங்களில் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது- வெங்கையா நாயுடு
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
Web Desk | news18
Updated: July 14, 2019, 2:32 PM IST
எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாத்தல் தொடர்பான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நூலை வெளியிட்டு பேசிய வெங்கைய நாயுடு, ”பழமைவாய்ந்த கட்டிடம் மற்றும் கலைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தேசிய கடமை.

கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது. தாய் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

மக்கள் தங்களது தேவைகளை அரசிடம் மட்டுமே எதிர்பார்த்திருக்கக் கூடாது” என்று அறிவுறுத்திய வெங்கைய நாயுடு, சென்னையில் வெள்ளம் வந்த போது தவித்த மக்கள், தற்போது தண்ணீருக்காக தவித்து வருவதாகவும் கவலை தெரிவித்தார்.

பாரம்பரியமான, தொன்மையான மொழிகள் பேசும் இடங்களில் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்றும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
Loading...
Also watch: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கொதித்தெழுந்த சூர்யா!

First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...