Home /News /tamil-nadu /

8 வழிச்சாலை கமிஷனில் பங்கு கிடைத்ததும் கூட்டணி விருந்து - பாமக பற்றி வேல்முருகன் பேச்சு

8 வழிச்சாலை கமிஷனில் பங்கு கிடைத்ததும் கூட்டணி விருந்து - பாமக பற்றி வேல்முருகன் பேச்சு

வேல்முருகன்

வேல்முருகன்

சேலம் எட்டு வழிச்சாலை பணிக்கு நீதிமன்றத்தில் தடையாணை வாங்கினேன் என்று கூறியவர்கள் மொத்த தொகை, 40 ஆயிரம் கோடியில், கமிஷன் தொகை, 4 ஆயிரம் கோடியில் பாதி கிடைத்தவுடன் கூட்டணி அமைத்து கொண்டு, ஒன்றாக விருந்து சாப்பிடுகின்றனர் என்று அதிமுக- பாமக கூட்டணி குறித்து வேல்முருகன் கிண்டலடித்தார்

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அதிமுக- பாமக கூட்டணி பற்றி கிண்டலாக கருத்து தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது, ரயில்வே உட்பட மத்திய அரசுப் பணிகள், 60 ஆயிரம் வரை நிரப்பப்பட்டு உள்ள நிலையில், இதில் ஒருவர் கூட தமிழர் இல்லையென்றும் திட்டமிட்டு இந்த ஜனநாயக படுகொலையை மத்திய அரசு நடத்தியுள்ளது என்றும் கூறினார்.

    இதனையடுத்து, தமிழகத்தில், ஒரு கோடியே 20 லட்சம் வட மாநிலத்தவர்கள் இருக்கின்றனர். மெளனமாக தமிழர்களின் வாழ்வுரிமையை பறித்து கொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், 90 சதவீதமும், மாநில அரசுப் பணிகளில், 100 சதவீதமும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும், 28ம் தேதி கோட்டை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

    பின்னர், கர்நாடகா, குஜராத், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மட்டுமல்லாது, ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா வரை உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இருக்கிறது.

    தமிழகத்தில் மட்டும் தான் இல்லையென்றும், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பணிகளில், தமிழக மக்களுக்கு முன்னுரிமை; எழுவர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு ஆதரவாக எங்களது தேர்தல் பங்களிப்பு இருக்கும். இதுகுறித்து மார்ச் முதல் வாரத்தில் கட்சி பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று கூறினார்

    சேலம் எட்டு வழிச்சாலை பணிக்கு நீதிமன்றத்தில் தடையாணை வாங்கினேன் என்று கூறியவர்கள் மொத்த தொகை, 40 ஆயிரம் கோடியில் கமிஷன் தொகை 4 ஆயிரம் கோடியில் பாதி கிடைத்தவுடன் கூட்டணி அமைத்து கொண்டு, ஒன்றாக விருந்து சாப்பிடுகின்றனர் என்று அதிமுக- பாமக கூட்டணி குறித்து வேல்முருகன் கிண்டலடித்தார்,

    Also Watch: தேர்தலில் எனது கூட்டணி மக்கள் உடன் தான்: கமல்ஹாசன்

    Published by:Anand Kumar
    First published:

    Tags: Admk Party, PMK, Velmurugan

    அடுத்த செய்தி