• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சமூக நீதிக்கான மண் என்பதை தமிழகம் நிரூபித்திருக்கிறது - வேல்முருகன்

சமூக நீதிக்கான மண் என்பதை தமிழகம் நிரூபித்திருக்கிறது - வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்

தமிழக மக்களை ஏமாற்றி வஞ்சித்து வெற்றிகளை அனுபவித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு அவர்கள் செய்த துரோகத்தின் பலனாக இன்று அவர்கள் போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளனர். பாமகவின் அரசியல்பாணி இனி தமிழகத்தில் பலிக்காது என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகம் சமூக நீதிக்கான மண் என்பதை நிரூபித்திருக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் சமூக நீதிக்கான மண் என்பதை நிரூபித்திருக்கிறது.இந்த மாபெரும் வெற்றியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார வரவேற்கிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிக்கு வித்திட்ட தமிழக மக்களுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய வேல்முருகன் பாரதிய ஜனதாவின் மதவாத பாசிச போக்கு தமிழகத்தில் எடுபடாது என்பதை தமிழகம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. தமிழக மக்கள் சரியான பாடத்தை பாஜகவிற்கு தொடர்ந்து கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தமிழக விவசாய வளங்களை அழிக்கும் விரதத்தை கடைபிடித்து வருகிறார்கள் பாஜகவினர். தமிழக மக்களை நாசமாக்க மோசமாக திட்டங்களை தீட்டி தமிழர் விரோத போக்கினை கடைபிடிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு அணி தொடர்ந்து போராடும் என்றும் வேல் முருகன் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய வேல்முருகன், ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். அதிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். தமிழக மக்களை ஏமாற்றி வஞ்சித்து வெற்றிகளை அனுபவித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு அவர்கள் செய்த துரோகத்தின் பலனாக இன்று அவர்கள் போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளனர். பாமகவின் அரசியல்பாணி இனி தமிழகத்தில் பலிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: