முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நேரில் வரமாட்டாரா ரஜினி..? வேல்முருகன் காட்டம்!

நேரில் வரமாட்டாரா ரஜினி..? வேல்முருகன் காட்டம்!

வேல்முருகன்

வேல்முருகன்

  • Last Updated :

நீதிமன்றத்துக்கு நேரில் வந்து ஆஜரானால் ரசிகர்களால் குழப்பம் ஏற்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் சொல்வது அபத்தமானது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

உள்ளாட்சி தேர்தலில் வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் வெற்றி பெற்றமைக்கு வாய்ப்பளித்த திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்தாக கூறினார்.

மேலும், டி.என்.பி.எஸ்.பி தேர்வெழுதினால் நியாயமான முறையில் வேலை கிடைக்குமா என்று ஒரு கோடி இளைஞர்களுக்கு கேள்வி எழுந்துள்ளது என்றும், தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் நூறு சதவீதம் தமிழர்களுக்கே வழங்கப்படவேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வேல்முருகன் தமிழகத்தில் மத்திய அரசுப்பணிகளில் 90% தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.

இதற்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென்று திமுக தலைவரிடம் கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்திற்கு நேரில் வரமுடியாது என்று ரஜினி சொல்வது அபத்தமானது என்றும், ரசிகர்களால் குழப்பம் ஏற்படும் என்பதை ஏற்க முடியாது என்றும் கூறினார். அவரது படம் வெளியாகும்போது ரசிகர்கள் முட்டி மோதும் போது குழப்பம் வராதா? என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

மக்கள் விரோத அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தொங்கு சதையாக தமிழக அரசு இருந்து வருகிறது என்றும் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

Also see...

top videos

    First published:

    Tags: Rajinikanth, Thoothukudi firing, Velmurugan