முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை - வேல்முருகன் கோரிக்கை

காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை - வேல்முருகன் கோரிக்கை

வேல்முருகன்

வேல்முருகன்

காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் நிராகரிக்கப்பட்டதால் 500க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.

  • Last Updated :

இரண்டாம் நிலை காவலர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று,  கடந்த ஆட்சியில் பணி நியமன ஆணை வழங்காமல் நிராகாரிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு பணி வழங்க வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை வைத்துள்ளார். 

காவலர் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காமல் இருக்கும் 500க்கும் மேற்பட்டவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

top videos

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், “பணி நியமனம் நிராகரிக்கப்பட்டதால் 500க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. வழக்குகள் முடிவடைந்தவர்கள் இப்போது நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு உள்ள நிலையில், அதனை காரணம் காட்டி பணி நியமனம் வழங்காமல் இருப்பது நியாயமா. எனவே இவர்களின் நியாயமான கோரிக்கையினை  தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என  அன்புடன் கேட்டுகொள்கின்றேன் என தெரிவித்தார்.

    First published:

    Tags: Employment, Jobs, Police, Tamil News, Unemployment, Velmurugan