Home /News /tamil-nadu /

’காடுவெட்டி’ குரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! - வேல்முருகன்

’காடுவெட்டி’ குரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! - வேல்முருகன்

மு.க.ஸ்டாலின், வேல்முருகன்

மு.க.ஸ்டாலின், வேல்முருகன்

மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து அவரது கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார் வேல்முருகன்.

  • News18
  • Last Updated :
தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக மு.க.ஸ்டாலினைச் சந்தித்தப் பிறகு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தொகுதி ஒதுக்கீட்டை நிறைவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால் இன்னும் ஒரு மாத காலமே உள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்தத் தேர்தலில் டி.டி.வி.தினகரனுடன் இணைந்து தேர்தலை எதிர் கொள்வார் என்று கருதப்பட்டது. இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து அவரது கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார் வேல்முருகன்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ‘ராமதாஸ் மட்டும் வன்னியர்களுக்கு சொந்தம் கொண்டாடுவது ஏற்கமுடியாது. 30 ஆண்டுகள் ராமதாஸ் உடனிருந்த ’காடுவெட்டி’ குரு மருத்துவக் கொலை செய்யப்பட்டுள்ளார். குருவின் குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளேன். அவர்கள் கூறிய ஆலோசனைபடி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தேன். மண்ணையும் மக்களையும் மொழியையும் காக்க திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளேன். நான் தேர்தலில் போட்டியிடவில்லை.

மோடி ஆட்சி தமிழர்களைக் கொன்று குவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசும் அவர்கள் கூறுவதை செய்துவருகிறது. மருத்துவக் கல்வி கனவை நாசமாக்கிவிட்டது. இதுவரையில் 7 தமிழர்களை விடுதலை செய்யவில்லை. எட்டுவழி சாலை திட்டத்தால் மக்களுக்கு பெரும் பாதிப்பு. ரயில்வே தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் புகுந்துள்ளனர்.

தமிழகத்தில், மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் வெளி மாநிலத்தினர் 60 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுக்கு எதைப்பற்றியும் கவலை கிடையாது.

அ.தி.மு.க உடன் கூட்டணி கிடையாது என்று கூறிய ராமதாஸ் தற்போது அ.தி.மு.க கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். அவரை மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

இன்று மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க மோடி ஆட்சியை அகற்ற லஞ்சம் தலைவிரித்தாடும் தமிழக அரசைக் கண்டிக்க தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன்.

அ.தி.மு.க. லஞ்ச பணத்தில் பங்கு பெற்றுக்கொண்டு இராமதாஸ், அ.தி.மு.க கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. வன்னிய சமூகத்திற்கு துரோகம் இழைத்து அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ளார் ராமதாஸ். தி.மு.க ஆட்சியில் தான் வன்னியர் மக்கள் உட்பட 108 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.’ என்று தெரிவித்தார்.

Also see:
Published by:Karthick S
First published:

Tags: MK Stalin, Velmurugan

அடுத்த செய்தி