Home /News /tamil-nadu /

டோல்கேட்டில் வேல்முருகன் கார் ஓட்டுநர் மீது தாக்குதல்!

டோல்கேட்டில் வேல்முருகன் கார் ஓட்டுநர் மீது தாக்குதல்!

வேல்முருகன்

வேல்முருகன்

சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் கிளம்பிவிட்டார்’ என்று காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் கூறியுள்ளார்

  • News18
  • Last Updated :
    காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் தொழுப்பேடு டோல்கேட்டில் தன்னுடைய கார் ஓட்டுநர் தாக்கப்பட்டதால் தர்ணாவில் ஈடுபட்டார் வேல்முருகன்.

    காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் தொழுப்பேடு டோல்கேட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் கார் ஓட்டுநர் டோல்கேட் பணியாளர்களால் தாக்கப்பட்டார். இதைக் கண்டித்து வேல்முருகன் டோல்கேட் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறி டோல்கேட் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டடத்தில் ஈடுபட்டார். இதையடுத்து டோல்கேட்டில் அனைத்து வாகனங்களும் கட்டணம் வசூலிக்காமல் சென்றதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

    பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வேல்முருகன் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

    இதுகுறித்து பேட்டியளித்த காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ், ‘சம்பவம் நடந்த போது காரில் வேல்முருகன் இல்லை. அவரது காரை ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். டோல்கேட்டில் செல்வதற்கான அனுமதி பெற்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த போது டோல்கேட்டில் நிறுத்தப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டோல்கேட் பணியாளர்களுக்கு தமிழ் சரியாக தெரியாது. ஓட்டுநர் புகாரின் அடிப்படையில் பணியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் கிளம்பிவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Velmurugan

    அடுத்த செய்தி