• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மகளை திருமணம் செய்ய முயன்ற தந்தை: அதிர்ச்சியில் தற்கொலை செய்துக்கொண்ட தாய்!

மகளை திருமணம் செய்ய முயன்ற தந்தை: அதிர்ச்சியில் தற்கொலை செய்துக்கொண்ட தாய்!

தற்கொலை செய்து கொண்ட தாய் - 2வது கணவர் குமரேசன்

தற்கொலை செய்து கொண்ட தாய் - 2வது கணவர் குமரேசன்

மகளை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டு இரண்டாவது தந்தை வற்புறுத்தியதால், தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில், 2 பிள்ளைகளுக்கு தாயான பெண்ணை 2-வதாக குமரேசன் திருமணம் செய்துக்கொண்டார். மகள் உறவு உள்ள மூத்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட தந்தை குமரேசன் மற்றும்  தற்கொலை செய்து கொண்ட கல்பனாவிற்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? திருமணத்திற்குப்பிறகு என்ன நடந்தது? என பலவிதமான கேள்விகள் எழுந்துள்ளன. 

    வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த மேல்புதுப்பேட்டையை சேர்ந்த கல்பனாவிற்கும், காவேரிப்பாக்கம் பெரியகிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு 18 வயதில் மஞ்சு மற்றும் 10 வயதில் சுப்புலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கல்பனாவிற்கும் அதே பகுதியை சேர்ந்தவரும் காவல்துறையில் பணியாற்றி வருபவருமான குமரேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ரமேஷிற்கும் கல்பனாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால்,  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டுனர். இதை தொடர்ந்து கல்பனா, குமரேசனை 2- வதாக திருமணம் செய்துக்கொண்டு தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

    கல்பனாவும் அவரது மகள் மஞ்சுவும் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். சென்னையில் காவலராக பணியாற்றி வரும் குமரேசன் அடிக்கடி ஊருக்கு சென்றுவருவதை வழக்கமாக கொண்டிருந்தார். கல்பனாவை விட வயது குறைவான குமரேசன், 18 வயதே ஆன அவரது மூத்த மகள் மஞ்சு மீது ஆசைப்பட்டுள்ளார். தனக்கு மஞ்சுவை திருமணம் செய்து வைக்கும் படி அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த கல்பனா அவள் உங்களுக்கு மகள் முறை என்று கூறியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறில் குமரேசனால் பலமுறை கல்பனா கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த கல்பனா, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் மஞ்சு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. பதறியடித்து, உள்ளே சென்று பார்த்த போது தாய் கல்பனா தூக்கில் தொங்கியதை மஞ்சு பார்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த மஞ்சுவும் குடும்பத்தாரும்,  அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை  கொண்டு சென்றனர். ஆனால் கல்பனா செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வாலாஜா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், அவர்கள் அலட்சியம் காட்டுவதாக மஞ்சு கூறினார்.  குமரேசன் காவல்துறையில் பணியாற்றி வருவதால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தனது தாய் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள மஞ்சு, காவல்துறை  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், புகாருக்குள்ளானவர் காவல்துறையில் பணிபுரிவதால் அவரை விசாரிக்க மறுப்பதாகவும், வாலாஜா காவல் நிலைய போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பக்கம் தந்தை முறையானவர் கொடுக்கும் தொல்லை.. தாய் மரணம்.. இப்போது காவல் நிலைய அதிகாரிகள் தனக்கு உதவி செய்யவில்லை.. என மஞ்சு கதறுகிறார்.  புகார்தாரர்களின் மனுவின் மீது விருப்பு வெறுப்பின்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட பெண்ணிண் கோரிக்கையாக உள்ளது.

    ALSO WATCH....

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: