ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தந்தையை கொன்றவரை கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர்..

தந்தையை கொன்றவரை கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தந்தையைக் கொன்றவரை கொலை செய்துவிட்டு தன் நண்பர்களுடன் போலீசில் சரணடைந்துள்ளார் விஜய் எனும் இளைஞர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாலமன் (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் தந்தையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அடித்துக்கொலை செய்துள்ளார். இதுகுறித்து சாலமன் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

  இதனால் விஜய்க்கும் சாலமனுக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தந்தையைக் கொலை செய்த சாலமனை கொலை செய்ய திட்டமிட்டு வேறு நண்பர்களின் உதவியோடு சாலமனுக்கு மது வாங்கிக் கொடுத்து மதுபோதையில் இருந்தபோது சாலமனை சரமாரியாக வெட்டிகொன்று அவரின் உடலை அண்ணா சாலையில் உள்ள மம்மி தனியார் மருத்துவமனையின் அருகே வீசிச்சென்றனர்.

  Also read: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன்.. சக போட்டியாளர்களால் மனமுடைந்த ஷிவானி

  இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய விஜய்யும் அவரின் நண்பர்கள் 6 பேரும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

  Published by:Rizwan
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Vellore