முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சிங்கமுகமூடி அணிந்து கொள்ளை... சிசிடிவி காட்சி வெளியானது

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சிங்கமுகமூடி அணிந்து கொள்ளை... சிசிடிவி காட்சி வெளியானது

ஜோஸ் ஆலுக்காஸ்

ஜோஸ் ஆலுக்காஸ்

வேலூரில் நகைக் கடையில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆந்திரா, கர்நாடகாவிற்கு தனிப்படைகள் விரைந்துள்ளன.

  • Last Updated :

வேலூர், தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், நேற்று பின்பக்க சுவற்றில் துளையிட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read : சிங்காரச் சென்னை 2.0 : கத்திப்பாரா நகர்புற சதுக்கம் திறப்பு

நகைக்கடையை சுற்றியுள்ள சாலைகளில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனையும் நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கடப்பா பகுதிக்கும், கர்நாடக மாநிலம் மைசூருவுக்கும் தனிப்படையினர் சென்றுள்ளனர்.

Also Read : கோவையில் மாயாமான 10-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு

இதனிடையே நகைக்கடையில் இருந்த சிசிடிவியில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகியுள்ளது. சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை முகக் கவசத்தை அணிந்தபடி, சிசிடிவி கேமராவில் அடிப்பதற்காக கையில் ஸ்பிரே உடன் அவர் இருப்பது போன்ற காட்சி அதில் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருப்பவரின் அங்க அடையாளங்களை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை கண்டறியும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

First published:

Tags: Crime News, Vellore