கடையில் வேலை பார்த்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை... நடவடிக்கைக்கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையம் முன்பு தர்ணா

வேலூரில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தவரை கைது செய்யவேண்டும் என்று காவல்நிலையத்தின்முன்பு பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடையில் வேலை பார்த்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை... நடவடிக்கைக்கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையம் முன்பு தர்ணா
பாலியல் பலாத்காரம் செய்தவரை கைதுசெய்ய கோரி இளம் பெண் தர்ணா
  • Share this:
வேலூர் மாவட்டம் காட்பாடி சேனூர் பகுதியில் வசிப்பவர் புனிதா. இவர் திருமணமானவர். இவருடைய கணவர் ஆறுமுகம் கட்டட மேஸ்திரி. புனிதா குடும்பக் கஷ்டம் காரணமாக காட்பாடியில் உள்ள சட்டகல்லூரியின் எதிரிலுள்ள ஒரு மார்கெட்டிங்க் நிறுவனத்தில் 2017ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்துள்ளார். கடந்த 2018 ஏப்ரல் 20ம் தேதி புனிதாவின் பிறந்தநாளை ஆஃபிசில் கொண்டாடியுள்ளனர். அன்று மாலை 6 மணிக்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரால்ஸ்டன் கருணாகரன் என்பவர் இப்பெண்ணை விருந்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த திண்பண்டங்களை அவருக்கு கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட அவர் மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணை பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு அதை அவர் வீடியோ எடுத்து வைத்துகொண்டு, அதனை அடிக்கடி இணையதளத்தில் போட்டுவிடுவதாக காட்டி மிரட்டி, அப்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதற்கு மறுத்தாலும் பலவந்தமாக அடித்து உதைத்து பாலியல் வல்லுறவு செய்துவந்துள்ளார்.

இதனால் அந்நிறுவனத்தின் பணியிலிருந்து இப்பெண் நின்றுவிட்டார். இருப்பினும் நேரடியாக அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று மிரட்டி மதுபோதையில் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


கடந்த அக்டோபர் 27ம் தேதி காந்தி நகர் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தபோது மீண்டும் மிரட்டி வம்பிழுத்திருக்கிறார். இதனால் பயந்த இந்த பெண் விருதம்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். எனினும் காவல்துறை இதுவரையில் நடவடிக்கை எடுக்காததால் வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண் புனிதா விருதம்பட்டு காவல்நிலைய வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட புனிதாவிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் தர்ணாவை கைவிட்டார். இதனால் காவல்நிலையம் அருகில் பரபரப்பு காணப்பட்டது.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading