ராணுவத்தில் சேர தீவிர பயிற்சி மேற்கொள்ளும் உயிரிழந்த வீரர்களின் மனைவிகள் - வீரம் விளைந்த ராணுவப்பேட்டை
போர் மற்றும் எல்லைதாண்டிய துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த வேலூர் மாவட்ட ராணுவ வீரர்களின் மனைவிகள், தங்களது கணவர்களை போல ராணுவத்தில் சேர பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- News18 Tamil
- Last Updated: July 27, 2020, 11:36 AM IST
வேலூர் மாவட்டம் ராணுவப்பேட்டையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் ஒவ்வொருவரும் தலைமுறை தலைமுறையாக ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட இந்திய ராணுவத்தில் பணிபுரிவர்களில் சுமார் 25 ஆயிரம் பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்,
கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கார்கில் போரில் ராணுவப்பேட்டை பகுதியை சேர்ந்த வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்று வீரமரணம் அடைந்தனர். போரில் தங்களது மகன் வீரமரணம் அடைந்தது பெருமை அளிக்கிறது எனவும் நாட்டிற்காக எங்களின் பங்களிப்பு உள்ளது என்பதை பார்த்து பெருமை அடைகிறோம் என அவர்களின் பெற்றோர்கள் நெகிழச்சியுடன் கூறுகின்றனர்.
எதிரி நாட்டு ராணுவத்தினரின் சண்டையில் உயிர்நீத்த வீரர்களின் அவரவர் மனைவிவிமார்களும் தாங்களும் ராணுவத்தில் சேர வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களின் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆங்கிலயேருக்கு எதிராக 1806ம் ஆண்டு தொடங்கிய வேலூர் சிப்பாய் புரட்சி முதல் தற்போது வரை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர். தலைமுறை தலைமுறையாக இந்திய ராணுவத்திற்கு வீரர்களை அனுப்பும் ராணுவப்பேட்டை கிராமம் வீரம் மிக்க மண் என்று சொல்வதில் எந்த வியப்பும் இல்லை.