நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து உறுதியான முடிவை அறிவிக்கவில்லை என்றாலும் ரஜினி நற்பணி மன்றம் சார்பில் ரஜினி மக்கள் மன்ற கூட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதனால் குழப்பத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அவரின் ரசிகர்களும் ரஜினிகாந்த் இந்த ஆண்டு நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டுமென தங்களின் ஆவலை போஸ்டர் ஒட்டி வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த் ரசிகர் ஒருவரால் ஒட்டப்பட்ட போஸ்டர்.
”மக்களின் ரத்தத்தை குடிக்கும் ஓநாய் கூட்டத்தையும் கழுகு கூட்டத்தையும் வேட்டையாட சிங்கப்பாதையில்தான் செல்ல வேண்டும்” என்றும் ”எங்கள் ஓட்டு ரஜினிக்கு” என்றும் ”மக்களாட்சி இனிதே ஆரம்பம்” என்றெல்லாம் ரஜினி படங்களுடன் அவரின் ரசிகர்கள் வேலூரின் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ள போஸ்டர்கள், பேனர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.