பெண்களை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட சைக்கோ கொலையாளி - அதிர்ச்சி வாக்குமூலம்

பெண்களை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட சைக்கோ கொலையாளி - அதிர்ச்சி வாக்குமூலம்
கைது செய்யப்பட்ட ஆனந்தன்
  • News18
  • Last Updated: August 22, 2019, 4:45 PM IST
  • Share this:
பெண்களை கொலை செய்து, சடலத்துடன் உடலுறவு கொள்ளும் வினோத சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரக்கோணம் ராமசாமி நகரில் வசித்து வந்த நிர்மலா, கடந்த ஜூலை 9ம் தேதி அன்று இரவு தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டார். நிர்மலாவின் கொலையின் மர்ம முடிச்சுகள் அவிழாத நிலையில், அவர் கொல்லப்பட்டு, 7ஆம் நாள் அதாவது ஜூலை 16ம் தேதி காலையில் அவரது நெருங்கிய தோழியான இந்திராணி வீட்டருகில் உள்ள தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

நிர்மலா கொலை குறித்து போலிசார் விசாரணை நடத்திய நிலையில் இந்திராணி உயிரை மாய்த்துக்கொண்டார். இருவருக்கும் நெருங்கிய தொடர்புடைய ஆனந்த் என்பவர் இருநாட்களுக்கு முன்பு தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள நகரியில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.


யார் இந்த ஆனந்த்? இந்த மரணங்களுக்கும் ஆனந்துக்கும் என்ன தொடர்பு?

ஆந்திர மாநிலம் நகரியில் கடந்த வாரம் சரோஜா என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் கிடந்தார். இந்தக் கொலை வழக்கில் ஆனந்த் என்பவர் போலீசாரிடம் பிடிபட்டார்; அவரிடம் நடத்திய விசாரணையில் சரோஜாவை அவரது கணவர் சொன்னதால் கொலை செய்ததாக ஆனந்த் வாக்குமூலம் அளித்தார்.

ஆனந்த் தங்கியிருந்த அறையைப் போலீசார் சோதனையிட்ட போது அங்கு தங்க நகைகள் கிடைத்தன. அதுகுறித்து போலீசார் விசாரித்த போதுதான், அரக்கோணத்தில் நிர்மலா கொலையின் மர்ம முடிச்சுக்களுக்கு விடை கிடைத்தது.அரக்கோணத்தில் சவுண்ட் சர்வீஸ் கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த ஆனந்துக்கு இந்திராணிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நெருங்கிய தோழியான நிர்மலாவுடனான தகராறுகள் குறித்து ஆனந்திடம் அடிக்கடி புகார் தெரிவித்து வந்துள்ளார் இந்திராணி. ஒரு கட்டத்தில் நிர்மலாவைத் தீர்த்துக் கட்டிவிடு என்றும் ஆனந்திற்கு தலையணை மந்திரம் ஓதியுள்ளார் இந்திராணி.

இதையடுத்து ஒருநாள் நிர்மலாவை சந்தித்த ஆனந்த் அவரிடம் 2000 ரூபாய் கொடுத்து தன்னுடன் உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்துள்ளார். ஆத்திரமடைந்த நிர்மலா, ஆனந்தின் கன்னத்தில் அறைந்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.

வெறிகொண்ட ஆனந்த், கடந்த ஜூலை 9-ம் தேதி இரவு வழக்கம்போல் இந்திராணி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்திராணியின் ஆலோசனைப்படி அவரது வீட்டில் இருந்து ஏணி மூலம் நிர்மலா வீட்டிற்குள் குதித்துள்ளார். அங்கு தனியாகத் துாங்கிக் கொண்டிருந்த நிர்மலாவின் தலையில் அம்மிக் கல்லைத் துாக்கிப் போட்டுக் கொலை செய்துள்ளார்.

பின்பு அவரிடம் இருந்த தங்கச் சங்கிலி, இரண்டு செல்போன்கள், இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வாகனத்தில் ஏறி தலைமறைவானார். போலீசார் விசாரணை கெடுபிடி தாங்க முடியாமல் 7-ம் நாள் இந்திராணி தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து அரக்கோணம் பக்கம் வராமல் நகரியில் பதுங்கிய ஆனந்த் சரோஜா என்ற பெண்ணையும் கொலை செய்துள்ளார்.

மற்ற எல்லா குற்றங்களையும் போல் ஆனந்தின் கதை கொலைகளோடு முடிந்து விடவில்லை. போலீசார் விசாரணையில் அவரது கொடூரமான மறுபக்கம் அம்பலமாகியது.

மற்ற எல்லா குற்றங்களையும் போல் ஆனந்தின் கதை கொலைகளோடு முடிந்து விடவில்லை. போலீசார் விசாரணையில் அவரது கொடூரமான மறுபக்கம் அம்பலமாகியது. மனிதர்களுக்கு மிக அரிதிலும் அரிதாக வரும் நெக்ரோஃபீலியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் ஆனந்த். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிணத்துடன் உடலுறவு கொண்டு அதில் ஆனந்தமடைவார்கள்.

நெக்ரோஃபீலியா நோயை மையக் கருவாகக் கொண்டு ஆங்கிலம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்கள் வெளிவந்து உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளன

மருத்துவ உலகின் மண்டையை பிய்க்க வைக்கும் மர்மமான நோய்களில் நெக்ரோஃபீலியாவும் ஒன்று. உலகில் இந்த நோயால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்கெடுப்போ புள்ளி விவரங்களோ இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆனந்த், நகரியில் தான் கொலை செய்த சரோஜா என்ற பெண்ணின் சடலம் மற்றும் நிர்மலாவின் சடலத்துடன் உறவு கொண்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அரக்கோணம் நகரில் சவுண்ட் சர்வீஸ் கடையில் ஆனந்த் வேலை பார்த்தபோது அதன் உரிமையாளரின் மகன் 2015-ம் ஆண்டு கடத்தப்பட்டார். இன்று வரை அவர் மீட்கப்படவில்லை. அந்த சிறுவனை ஆனந்த் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வீடியோ பார்க்க: சாலை வசதி இல்லாததால் சடலத்தை பாலத்தில் கயிறு கட்டி இறக்கும் அவலம்

First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்