ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஏழு வாரகால பரோல் முடிவடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 25ம் தேதி பரோல் பெற்று வெளிவந்த அவருக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனிடையே பரோலை நீட்டிக்கக்கோரி நளினி மீண்டும் மனு தாக்கல் செய்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறுவதாக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சிறை நிர்வாக அனுமதியுடன் நேற்று வேலூர் மத்திய சிறையில் உள்ள கணவர் முருகனை நளினி சந்தித்து பேசினார். பின்னர், இன்று வேலூர் பெண்கள் மத்திய சிறையில் நளினி அடைக்கப்பட்டார்.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.