வேலூர் மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் முயற்சித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது!
ஸ்டாலின் - முதல்வர்
  • News18
  • Last Updated: August 3, 2019, 9:29 AM IST
  • Share this:
வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

பணப்பட்டுவாடா புகாரால் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏ.சி சண்முகத்தை ஆதரித்து அணைக்கட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது, வேலூரில் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததே காரணம் என்றார்.


ஆனால், தேர்தலை அதிமுகதான் திட்டமிட்டு நிறுத்திவிட்டதாக ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் விமர்சித்தார். வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றும் வாரிசே கட்சிக்கு தலைமையேற்பதுதான் தவறு என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

திமுக-வின் தூண்டுதலின் பேரில் எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆசைவார்த்தைகளை நம்பி அதிமுகவை விட்டுப் பிரிந்துசென்ற 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் விமர்சித்தார்.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பேரணாம்பட்டு, உமராபாத் உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் சென்று பரப்புரை மேற்கொண்ட அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் ஒரு விவசாயி எனக் கூறிக் கொண்டு விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருவதாக கடுமையாக சாடினார். மேலும், தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று பாடல் பாடி அசத்தினார்.தொடர்ந்து பேசிய ஸ்டாலின், திமுக கூட்டணி எம்பிக்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வியெழுப்பிய முதலமைச்சர் பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதேபோன்று, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் வேலூரில் உள்ள பள்ளி வாசல் முன்பு துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர். அதிமுக சார்பில் அமைச்சர் நிலோபர் கபில் வாணியம்பாடி காதர்பேட்டை பள்ளி வாசல் முன்பு வாக்கு சேகரித்தார். இந்நிலையில், தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால், அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also see... ’துணை முதல்வர் பதவி மீது ஆசையில்லை’

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

 
First published: August 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading