Home /News /tamil-nadu /

Breaking: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து!

Breaking: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து!

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற சோதனையில், துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமென்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. 10 கோடி ரூபாய் வரை பணம் சிக்கியதாக கூறப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    வேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் கடந்த மாதம் 29-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டர். அப்போது, துரை முருகன் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் கைப்பற்றினர்.

    பின்னர், இரு தினங்கள் கழித்து ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற சோதனையில், துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமென்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. 10 கோடி ரூபாய் வரை பணம் சிக்கியதாக கூறப்பட்டது.

    வேலூர் மாவட்ட மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்வதற்கு தமிழக தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. வேலூர் மாவட்டத்துக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு தற்போது, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்அடிப்படையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வேலூர் மக்களவைத் தொகுதிக்குள் வரும் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்று துரை முருகன் விமர்சனம் செய்துள்ளார்.




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Upper North Tamil Nadu Lok Sabha Elections 2019, Vellore S22p08

    அடுத்த செய்தி