வேலூரில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்! இறுதி கட்டப் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

தி.மு.க சார்பில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று கதிர் ஆனந்த்துக்கு வாக்கு சேகரித்தனர்.

வேலூரில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்! இறுதி கட்டப் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு
வேலூர் தி.மு.க பிரச்சாரம்
  • News18
  • Last Updated: August 3, 2019, 6:38 PM IST
  • Share this:
வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்டப் பிரசாரம் இன்று மாலை ஆறு மணியுடன் ஓய்ந்தது. இறுதிநாளான இன்று, தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி கட்சியினர் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதிக்கு பணம் பட்டுவாடா நடைபெற்றதைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு ரத்து செய்தது. அதனையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.

தி.மு.க கூட்டணி சார்பில் கதிர் ஆனந்த்தும், அ.தி.மு.க கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகிறன. நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை களமிறங்கியுள்ளது. வாக்கு சேகரிப்புக்கு இன்று கடைசி நாள் என்பதால், தி.மு.க கூட்டணி கட்சிகளும், அ.தி.மு.க கூட்டணி கட்சிகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். தி.மு.க சார்பில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று கதிர் ஆனந்த்துக்கு வாக்கு சேகரித்தனர்.


அதேப்போல, அ.தி.மு.க அமைச்சர்கள், ஏ.சி.சண்முகத்துக்கு வாக்கு சேகரித்தனர். தேர்தல் விதிமுறைகளின்படி, இன்று 6 மணிக்கு வாக்குச் சேகரிப்பு முடிவு பெற்றது.

Also see:

First published: August 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்