வேலூர் மக்களவைத் தொகுதி 1951-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
முதலாவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் CWL கட்சியைச் சேர்ந்த ராமசந்தர் மற்றும் எம். முத்துகிருஷ்ணன் கூட்டாகப் போட்டியிட்டு இங்கு வெற்றி கண்டனர். காங்கிரஸ் மற்றும் தி.மு.க தலா 5 முறை வேலூர் தொகுதியை மாறி மாறி ஆட்சி செய்து வந்தன.
1984-ம் ஆண்டு முதன்முறையாக இந்தத் தொகுதியை அ.தி.மு.க கைப்பற்றியது. அதன் பின்னர், 20 ஆண்டுகள் கழித்து நடந்த 16-வது மக்களவைத் தேர்தலில்தான் அ.தி.மு.க மீண்டும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றியது.
2014-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் பி. செங்குட்டுவன் 3,83,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 3,24,326 வாக்குகள் பெற்று நூலிழையில் தனது வெற்றியை நழுவ விட்டார்.
முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் 2,05,896 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் இளஞ்செழியன் 43,960 வாக்குகளையும் பெற்று தோல்வியைத் தழுவினர். 16-வது மக்களவைத் தேர்தலில் இங்கு மொத்தம் 74.58% வாக்குகள் பதிவாகின.
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.