வேலூர் மாவட்டம் திருவலம் அருகே பொன்னையாற்றில் கட்டப்பட்ட ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால், சென்னையில் இருந்து வேலூர் வழியாக வெளியூர் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே, 1865-ல் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் காட்பாடி வழியாக சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மேம்பாலத்தின் பில்லர் பகுதியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவ்வழியாக ரயில்கள் இயக்கப்படுவது நேற்று மாலை நிறுத்தப்பட்டது. மேலும் பராமரிப்பு பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், திருவலம் - முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே, பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் விரிசல் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, சாக்கு பைகளில் மணல் மற்றும் ஜல்லிகளை நிரப்பி பாலத்தின் கீழ், மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அடுக்கப்பட்டன. சென்னையில் இருந்து காட்பாடி செல்லும் ரயில் பாதை முடக்கப்பட்டு, காட்பாடி முதல் சென்னை இடையேயான ரயில் பாதையில் ஒரு வழித்தட மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் ரயில்கள் ஆங்கங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, பாலத்தின் 38 மற்றும் 39வது கண்ணில் ஏற்பட்டுள்ள விரிசலை விரைந்து சீரமைப்பது தொடர்பாக ஆராய, சென்னையிலிருந்து திருவலத்திற்கு ரயில்வே உயரதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு விரைந்துள்ளது.
இந்நிலையில் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ரத்தான ரயில்களின் விவரம் :
வ.எண் 16089 சென்னை – ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
வ.எண். 16090 ஜோலார்பேட்டை – அரக்கோணம் இடையே இயக்கப்படும் ஏலகிரில் எக்ஸ்பிரஸ் ரயில்,
வ.எண் 06033 சென்னை கடற்கரை டூ வேலூர்,
வ.எண் 06034 வேலூர் டூ சென்னை கடற்கரை
வ.எண் 16085 அரக்கோணம் – ஜோலார்பேட்டை
வ.எண் 16085 ஜோலார்பேட்டை – அரக்கோணம்
வ.எண் 12028 பெங்களூரு – சென்னை சென்ட்ரல்
வ. எண் 12027 சென்னை செண்ட்ரல் – பெங்களூரு
வ.எண் 11066 ரேணிகுண்டா – மைசூரு
ஆகிய 9 ரயில்கள் முழுமையாக இன்று ரத்து செய்யப்படுகின்றன. மேலும் 4 ரயில்கள் பகுதியாக ரத்து செய்திருப்பதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.