வேலூர் தெற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சலவன் பேட்டை சுடுகாட்டில் கோபி (38) என்பவரை சரவணனும் அவரது நண்பர்களும் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் கவலைக்கிடமான நிலையில் கோபி அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கோபி சலவன்பேட்டை கச்சேரி தெருவில் வசித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரவணனின் மனைவி ரமணி என்பவரை ஓராண்டுக்கு முன்பு பெங்களூருக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை வைத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், கோபி வேலூர் வருவதை எதிர்பார்த்திருந்தார்.
Also read: தந்தையை கொன்றவரை கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர்
இந்த நிலையில் கோபியின் உறவினர் ஒருவர் வேலூரில் இறந்துபோனதால் அவர் வேலூருக்கு வந்து மயானம் சென்றபோது, சரவணனும் அவரது நண்பர்களும் சேர்ந்து கோபியை கத்தியால் குத்தியுள்ளனர்.
கவலைக்கிடமான நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோபி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல், வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் தன் தந்தையைக் கொன்ற சாலமன் என்பவரை கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார். ஒரே நேரத்தில் இப்படி இரு வேறு இடங்களில் நடந்த கொலையால் வேலூரில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.