வேலூர் தொகுதியில் வாக்கு வங்கியில் கோட்டை விட்ட திமுக...

வாக்கு வங்கி

அதிமுகவைப் பொறுத்தவரையில் வெற்றிகரமான தோல்வி என்று சொல்லலாம். ஏனெனில் அதிமுக கட்சி தோற்றாலும் வேலூரில் நடந்த கடந்த தேர்தல்களோடு ஒப்பிடும்போது வாக்கு சதவிகிதம் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வேலூர் தொகுதியில் திமுக வெற்றிக் கொடி நாட்டினாலும் அதிமுகவின் வாக்கு வங்கியும் கணிசமாக உயர்த்திருக்கிறது. 

கடந்த 2009-ம் ஆண்டு வேலூர் தொகுதியில் திமுகவின் அப்துல் ரகுமான் 3,60,474 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு வேலூர் தொகுதியை திமுக ஒதுக்கியது. அந்த கட்சியின் வேட்பாளரால் 3-ம் இடமே பிடிக்க முடிந்தது.

ஆனால், இம்முறை திமுகவின் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் இழந்த வாக்கு வங்கியை திமுக திரும்பப் பெற்றுள்ள போதும் 2009-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது தற்போது 2.53 விழுக்காடு வாக்குகளை திமுக குறைவாகவே பெற்றுள்ளது.

இதையும் கொஞ்சம் பாருங்க: இது வெற்றிகரமான தோல்விதான், ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு... - சிவசங்கரி (அதிமுக)
அதிமுகவைப் பொறுத்தவரையில் வெற்றிகரமான தோல்வி என்று சொல்லலாம். ஏனெனில் அதிமுக கட்சி தோற்றாலும் வேலூரில் நடந்த கடந்த தேர்தல்களோடு ஒப்பிடும்போது வாக்கு சதவிகிதம் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

2009-ம் ஆண்டு அக்கட்சியின் எல்.கே.எம்.பி. வாசு 2 ,53,081 வாக்குகள் பெற்று தோல்வியடைந்திருந்தார். ஆனால் 2014 தேர்தலில் வென்ற அதிமுகவின் செங்குட்டுவன் வாக்கு வங்கியை 34.99% இருந்து 39.65% உயர்த்தினார்.

தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தோற்றபோதும் பெற்ற வாக்குகள் கடந்த தேர்தலை விட 6% மேல் அதிகரித்து 46% பெற்றுள்ளது.

Also Watch:  வேலூர் கோட்டையை பிடித்தது திமுக...! 

Published by:Anand Kumar
First published: