இடைத்தேர்தலில் ஏற்றம்... தற்போது சறுக்கல்...! 2 தொகுதிகளில் அதிமுகவுக்கு மாறிய திமுக வாக்குகள்

வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளையும் மற்ற தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளையும் பெற்றுள்ளது.

news18
Updated: August 10, 2019, 8:23 AM IST
இடைத்தேர்தலில் ஏற்றம்... தற்போது சறுக்கல்...! 2 தொகுதிகளில் அதிமுகவுக்கு மாறிய திமுக வாக்குகள்
ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி
news18
Updated: August 10, 2019, 8:23 AM IST
வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளில், 2 மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலை விட தற்போது அதிமுகவின் வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தொகுதி, 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அதன்படி, வேலூர் தொகுதியில் திமுக 78 ஆயிரத்து 901 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக, திமுகவை விட குறைவாக 72 ஆயிரத்து 626 வாக்குகளை பெற்றுள்ளது.

அணைக்கட்டு தொகுதியை பொறுத்தவரை அதிமுகவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. அதிமுகவுக்கு 88 ஆயிரத்து 770 வாக்குகளும், திமுகவுக்கு 79 ஆயிரத்து 231 வாக்குகளும் கிடைத்துள்ளன.


கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுகவுக்கு 80 ஆயிரத்து 100 வாக்குகளும், திமுகவுக்கு 71 ஆயிரத்து 991 வாக்குகளும் கிடைத்துள்ளன.

வாணியம்பாடி தொகுதியில் திமுகவே அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அதன்படி, திமுகவுக்கு 92 ஆயிரத்து 599 வாக்குகளும், அதிமுகவுக்கு 70 ஆயிரத்து 248 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதேபோல் ஆம்பூர் தொகுதியும் திமுகவுக்கு கைகொடுத்துள்ளது. திமுக 79 ஆயிரத்து 371 வாக்குகளையும், அதிமுக 70 ஆயிரத்து 768 வாக்குகளையும் பெற்றுள்ளது.

Loading...

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆம்பூர் தொகுதி இடைத்தேர்தலோடு இந்த வாக்குகளை ஒப்பிடும்போது, திமுகவுகு வாக்குகள் குறைந்துள்ளன. கடந்த இடைத்தேர்தலில் திமுக 96 ஆயிரத்து 455 வாக்குகள் பெற்ற நிலையில் இந்த தேர்தலில், 17 ஆயிரத்து 84 வாக்குகள் குறைவாக, 79 ஆயிரத்து 371 வாக்குகள் பெற்றுள்ளது.

இதேபோல், இடைத்தேர்தலில் அதிமுக 58 ஆயிரத்து 688 வாக்குகளும் பெற்ற நிலையில், இந்த முறை 12 ஆயிரத்து 80 வாக்குகள் அதிகரித்து, 70 ஆயிரத்து 768 வாக்குகளை பெற்றுள்ளது

இதேபோல், குடியாத்தம் இடைத்தேர்தலில் திமுக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது 82 ஆயிரத்து 887 வாக்குகளை பெற்றிருக்கிறது. இவை கடந்த தேர்தலை விட 22 ஆயிரத்து 429 வாக்குகள் குறைவு. அதேசமயம், இடைத்தேர்தலில் 78 ஆயிரத்து 155 வாக்குகள் பெற்ற அதிமுக, இந்த முறை 4 ஆயிரத்து 732 வாக்குகள் கூடுதலாக பெற்று 82 ஆயிரத்து 887 வாக்குகளை பெற்றுள்ளது.

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...