Vellore Election Results LIVE | வேலூரில் திமுக வெற்றி!

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகள், தகவல்கள் உடனுக்குடன் நேரலையாக...

  • News18 Tamil
  • | August 09, 2019, 14:41 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    11:10 (IST)
    15:16 (IST)

    மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்த அறிவிப்பை மாலை 4.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    15:4 (IST)

    வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே திமுகவினரை போலீசார் அனுமதிக்காததால் இருதரப்பு இடையே வாக்குவாதம்

    14:50 (IST)

    வாணியம்பாடியில் அதிமுகவை விட திமுகவுக்கு கூடுதலாக சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளது

    14:49 (IST)

    திமுகவின் வெற்றியை வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியே இறுதி செய்துள்ளது. 

    14:48 (IST)

    வாக்கு என்னும் மையம் அருகே வரத் துவங்கிய திமுகவினருக்கு போலீசாருக்கும் சிறிய தள்ளு முள்ளு

    14:43 (IST)

    வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

    14:38 (IST)

    அணைக்கட்டு, கே.வி குப்பம், குடியாத்தம் தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன

    14:37 (IST)

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

    14:26 (IST)

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்