Vellore Results | வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை

Vellore Election Results | தற்போது ஏறத்தாழ 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார்.

news18
Updated: August 9, 2019, 12:15 PM IST
Vellore Results |  வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை
கதிர் ஆனந்த்
news18
Updated: August 9, 2019, 12:15 PM IST
வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. காலை முதல் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று வந்தார்.

சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வரை அவர் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால், ஏழாம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் முன்னிலை நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டது.


தொடர்ந்து முன்னிலை வாக்கு வித்தியாசம் குறைந்துகொண்டே வந்தது. இதனை அடுத்து திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.

தற்போது ஏறத்தாழ 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார். தற்போது வரை, அதிமுக வேட்பாளர் 290064 வாக்குகளும், 297837 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 15755 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...