வேலூர் தேர்தல் ரத்துக்கு காரணமான பூஞ்சோலை சீனிவாசன் யார்?

பூஞ்சோலை சீனிவாசன் பினாமியாக இருக்கலாம் என்பதால், அவர் மீது பினாமி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வருமானவரித்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Desk | news18
Updated: April 17, 2019, 9:32 AM IST
வேலூர் தேர்தல் ரத்துக்கு காரணமான பூஞ்சோலை சீனிவாசன் யார்?
பூஞ்சோலை சீனிவாசன்
Web Desk | news18
Updated: April 17, 2019, 9:32 AM IST
வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான குடோனில் இருந்து 11 கோடியே 54 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த பூஞ்சோலை சீனிவாசன் யார்? அவருக்கும் தேர்தல் ரத்துக்கும் என்ன தொடர்பு?. 

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும் களமிறங்கினர்.

இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி துரைமுருகன் வீடு மற்றும் அலுவலகங்கள், கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதனை கைச்செலவிற்காக வைத்திருந்த பணம் என துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

அதற்கு அடுத்து ஏப்ரல் 1-ம் தேதி துரைமுருகனின் நெருங்கிய ஆதரவாளர்களாக கருதப்பட்ட பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட சிலருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையிட்டனர். இதில், பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் வாக்காளர்கள் பெயர் பட்டியலுடன் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த 11 கோடியே 54 லட்சம் ரூபாய் சிக்கியது.

இதனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யவே பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பூஞ்சோலை சீனிவாசனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில், பூஞ்சோலை சீனிவாசன், துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான தொழில் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை கவனித்து வருவது தெரியவந்தது.

துரை முருகன் உடன் பூஞ்சோலை சீனிவாசன்


மேலும், பூஞ்சோலை சீனிவாசன் இதுவரை வருமானவரி கணக்கு கூட தாக்கல் செய்யாத நிலையில், அவருக்கு சொந்தமான குடோனில் 11 கோடிக்கு மேல் எப்படி ரொக்கம் வந்தது என்ற கேள்விக்கு, அவர் உரிய விளக்க தரவில்லை.

அதிகாரிகள் கைப்பற்றிய பணம் முழுவதும் விவசாயத்தின் மூலம் சம்பாதித்ததாக முதலில் கூறிய பூஞ்சோலை சீனிவாசன், எவ்வளவு நிலம் உள்ளது என்ன பயிர் செய்து பணம் சம்பாதித்தீர்கள் என்ற கேள்விக்கு சரியாக பதிலளிக்கவில்லைஇதற்கு பிறகு நிலத்தரகு செய்தன் மூலம் பணம் ஈட்டியதாக பூஞ்சோலை சீனிவாசன் கூறியுள்ளார்.

யாருடைய நிலத்தை விற்று பணம் சேர்த்தீர்கள். எத்தனை நிலத்தை விற்பனை செய்து கொடுத்துள்ளீர்கள் என்று அதிகாரிகள் விசாரணை நடத்த அவர் பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளார்.

இதனால், பூஞ்சோலை சீனிவாசன் பினாமியாக இருக்கலாம் என்பதால், அவர் மீது பினாமி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வருமானவரித்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also see... விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த ஜெட் ஏர்வேஸ் முடிவு!  

''தி.மு.க பிரமுகர்கள் மிரட்டுகின்றனர்'' - கரூர் ஆட்சியர் குற்றச்சாட்டு

Also see... கனிமொழி வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு - நேற்றிரவு நடந்தது என்ன?   


வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் முக்கிய காரணமான சீனிவாசன் யார்?Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...