கமகமக்கும் ஆம்பூர் பிரியாணி - பிரசாரத்துக்கு முன்னரே கடைகளுக்கு படையெடுக்கும் அரசியல் கட்சியினர்!

அரசியல் கட்சியினர், நாவில் எச்சல் ஊற வைக்கும் ஆம்பூர் பிரியாணி கடைகளை நோக்கி படையெடுப்பதால் விற்பனை படுஜோராக உள்ளது

Web Desk | news18
Updated: August 1, 2019, 10:07 AM IST
கமகமக்கும் ஆம்பூர் பிரியாணி - பிரசாரத்துக்கு முன்னரே கடைகளுக்கு படையெடுக்கும் அரசியல் கட்சியினர்!
ஆம்பூர் பிரியாணி
Web Desk | news18
Updated: August 1, 2019, 10:07 AM IST
வேலூர் தேர்தல் களம் போல ஆம்பூர் பிரியாணி விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

வேலூர் கோட்டையை பிடிக்கப்போவது யார் என்ற போட்டியில், அதிமுகவும் - திமுகவும் போர்க்களத்திற்கு போவதை போல தயாராகி வருகின்றன. தம் பலத்தை நிரூபிக்க இரு கட்சிகளும் தமிழகம் முழுவதில் இருந்தும் தொண்டர் படையை வேலூரில் தஞ்சமடைய வைத்துள்ளது.

இந்த பரப்புரைக்காக வரும் அரசியல் கட்சியினர், நாவில் எச்சல் ஊற வைக்கும் ஆம்பூர் பிரியாணி கடைகளை நோக்கி படையெடுப்பதால் விற்பனை படுஜோராக உள்ளது.


பிரியாணி கடை உரிமையாளர் பூமணி இது குறித்து கூறுகையில், “பிரியாணி விற்பனை அதிகரித்திருப்பதால் ஆடு, கோழி இறைச்சி விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது” என்றார்.

மணக்கும் பிரியாணி சுண்டி இழுப்பதால், கட்சி வேலையான பிரச்சாரத்திற்கு முன்பே பிரியாணி கடைக்குள் அரசியல் கட்சியினர் நுழைந்து விடுகின்றனர் என்று அதிமுக மற்றும் திமுக பிரமுகர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்தரப்புதான் காரணமென அதிமுகவும், திமுகவும் மாறி மாறி பழித்துக் கொண்டாலும், மற்ற தொகுதிகளோடு அல்லாமல் வேலூரில் மட்டும் தனியாக வாக்குப்பதிவு நடத்தப்படுவது பிரியாணி வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Loading...

Also see... யார் இந்த சித்தார்த்தா?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...