#Breaking | வேலூரில் தேர்தலை நடத்த அதிமுக வேட்பாளர் வழக்கு - அவசரமாக விசாரணை

news18
Updated: April 17, 2019, 9:47 AM IST
#Breaking | வேலூரில் தேர்தலை நடத்த அதிமுக வேட்பாளர் வழக்கு - அவசரமாக விசாரணை
சென்னை உயர்நீதிமன்றம்
news18
Updated: April 17, 2019, 9:47 AM IST
வேலூரில் தேர்தலை நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் 10.30 மணிக்கு விசாரிக்கிறது.

தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசனின் குடோனில், 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, அந்தத் தொகுதி மக்களவைத் தேர்தல் மட்டும் ரத்து செய்வதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஏ.சி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக கருதி 10.30 மணிக்கு, நீதிபதிகள் மணிக்குமார் அமர்வு விசாரிக்க உள்ளது.

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...