ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெண் மருத்துவர் ஆண் நண்பர் கண்முன் கேங் ரேப்... தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

பெண் மருத்துவர் ஆண் நண்பர் கண்முன் கேங் ரேப்... தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

மாதிரி படம்

மாதிரி படம்

Vellore Crime News | வேலூரில், பெண் மருத்துவரை ஆட்டோவில் கடத்திய கும்பல், அவரது ஆண் நண்பர் கண் முன்னால், கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

வேலூரின் மையப் பகுதியில் அந்தப் பிரபல மருத்துவமனை உள்ளது அதில், நண்பர்களான ஒரு பெண் மருத்துவரும், ஆண் நண்பரும் பணியாற்றி வருகின்றனர் கடந்த சனிக்கிழமை அன்று, வேலூர் - காட்பாடி - திருவலம் சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியேட்டருக்கு இருவரும் படம் பார்க்கச் சென்றனர். படம் முடிந்து நள்ளிரவு 12.30 மணிக்கு இருவரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 5 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு சென்றனர். தாங்கள் ஷேர் ஆட்டோ தான் என்றும் ஏறிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். அதை நம்பிய இருவரும் ஆட்டோவில் ஏறியுள்ளனர்.

காட்பாடியில் இருந்து வேகமாக சென்ற ஆட்டோ, கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி அணுகு சாலையில் திரும்பியுள்ளது. பதற்றமடைந்த இருவரும் கேட்டதற்கு சாலையை மறைத்து வேலை நடப்பதாக ஓட்டுநர் கூறியிருக்கிறார். அணுகு சாலையில் பாய்ந்து சென்ற ஆட்டோ, சத்யா ஷோரூம் முன்பாக உள்ள சாலை வழியாக பாலாற்றங் கரைக்கு சென்றது. இருவரின் அதிர்ச்சி விலகும் முன்பு, அந்தக் கும்பல் பாலாற்றங்கரையில் அவர்களை ஆட்டோவில் இருந்து இறக்கியது.

அவர்களில் ஒருவர் ஆண் நண்பரின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டார். மற்ற 4 பேரும், ஆண் நண்பரின் கண் முன்னால் பெண் மருத்துவரைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு கொடுமைக்கு ஆளாக்கினர். பின்னர் அவர்களிடம் இருந்து செல்போன்கள், ஏடிஎம் அட்டையைப் பறித்துக் கொண்டு விடுவித்தனர். ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 40 ஆயிரம் ரூபாயை எடுத்தனர்.

Also Read : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதியுடன் நாளை துபாய் பயணம்

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரும். ஆண் மருத்துவரும் இதுகுறித்து போலீசில் புகாரளிக்கவில்லை. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு சத்துவாச்சாரியில் டிப்டாப் உடை அணிந்திருந்த 4 பேர் தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடம் விரைந்து அவர்களைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பெண் மருத்துவரைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய கும்பல் இவர்கள் தான் என்பது அப்போதுதான் தெரியவந்தது.

பெண் மருத்துவரிடம் கொள்ளையடித்த பணத்தில் டிப்டாப் உடை வாங்கியதும் உல்லாசமாக செலவு செய்ததும் தெரியவந்தது. அவர்களில் 2 பேர் 17 வயது சிறுவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மற்றவர்கள், 20 வயதான மணிகண்டன், 20 வயதான பார்த்திபன் என்பதும் தெரியவந்தது; தலைமறைவான 21 வயது சந்தோஷ் என்ற நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.  அந்தச் சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள்; ஏற்கனவே சில வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள்.

அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏடிஎம் அட்டையைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வேலுார் மாவட்டத்தில் சமீப காலமாக, 18 வயதுக்குட்பட்ட சிறார்கள், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகளவில் நடந்து வருகிறது.

First published:

Tags: Crime News, Vellore