ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தாயை இழந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவரும் கால்நடை மருத்துவரின் மனைவி

தாயை இழந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவரும் கால்நடை மருத்துவரின் மனைவி

சந்தியா

சந்தியா

ஒரு குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்  எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தாயை இழந்த குழந்தைக்கு 30 கிலோமீட்டர்  சென்று தாய்ப்பால் கொடுத்துவரும் கால்நடை மருத்துவரின் மனைவி

வேலூர்மாவட்டம் கீழ்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவிக்கு வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்தபெண் அன்றே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் தாய்ப்பாலும், தாயின் பாசமும் அந்த குழந் தைக்கு கிடைக்கவில்லை. அந்த குழந்தை தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறது.

அந்த குழந்தையின் தந்தை ஒரு விவசாயி. அவர் தனது கால்நடைகளை வேலூர் அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அடிக்கடி கொண்டு வருவது வழக்கம். அப்போது அவரது மனைவி இறந்தது குறித்து மருத்துவரிடம் கூறுகிறார். குழந்தை தாயின்றி வளர்ந்து வருவதும் கால்நடை மருத்துவர் ரவிசங்கருக்கு தெரியவந்தது.

Also Read: ஒரே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு கண், கை, கால் செயல்திறன் பாதிப்பு.. தடுப்பூசியே காரணம் என புகார்!!

இதுகுறித்து அவர் தனது மனைவி சந்தியாவிடம் (வயது 26) கூறினார்.  ரவிசங்கர் - சந்தியா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சந்தியா, தாயின்றி வளரும் அந்த ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் தானமாக கொடுக்க விரும்புவதாக தனது கணவரிடம் தெரிவித்தார். அவரும் சம்மதம் தெரிவிக்கவே வாரம் ஒருமுறை காட்பாடியில்  இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழ்அரசம்பட்டுக்கு பயணம் செய்து அந்த குழந்தைக்கு சந்தியா தாய்ப்பால் ஊட்டி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஒரு குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்  எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் இருந்தால் மட்டுமே கிடைக்கும். எனவே அந்த குழந் தைக்கு தாய்ப்பால் கொடுக்க நினைத்தேன். என்னை பொறுத்தவரையில் தாய்ப்பால் தானம் தான் சிறந்த தானமாகும். ஏராளமான  குழந்தைகள் தாய்ப்பால்  இன்றி வளர்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக கொடுக்க முன்வரவேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு  பெண்களுக்கு ஏற்பட வேண்டும். அதனால் விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகிறேன்” எனக் கூறுகிறார்.

செய்தியாளர் :  செல்வம் (வேலூர்)

First published:

Tags: Breast milk, Breastfeeding, Child, Vellore, Woman