தொழிலாளர் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு 'பீஸ்ட்' சிறப்பு காட்சி - விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு
தொழிலாளர் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு 'பீஸ்ட்' சிறப்பு காட்சி - விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு
திரையரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 'பீஸ்ட்' சிறப்பு காட்சி
150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்தனர். இடைவேளையின் போது அவர்களுக்கு பாப்கார்ன் தண்ணீர் உள்ளிட்டவற்றை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.
தொழிலாளர் தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பீஸ்ட் திரைப்படம் பார்க்க விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட தொண்டரணி செயலாளர் இளங்கோ தலைமையில் தொழிலாளர் தின நாளான இன்று நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை குடியாத்தம் சக்தி திரையரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் நகர விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று கொடுத்து வந்துள்ளனர்.
இன்று காலை 9 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு 166க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆர்வமாக திரைப்படம் பார்க்க வந்துள்ளனர்.
நீண்ட நாள் ஆசைகளாக இருந்து வந்த கனவு இன்று நிஜமானது என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள். இந்தக் காட்சியின்போது இடைவேளையில் அவர்களுக்கு அனைவருக்கும் பாப்கார்ன், தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தியேட்டரில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்து மாற்றுத் திறனாளிகளின் ஆசையை நிறைவேற்றிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் குடியாத்தம் நகர நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
-செய்தியாளர்: கோபி.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.