வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த பட்டியூர் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான ஏழுமலை. இவர் மேல்மாயில் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி ஏழுமலைக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா பாதிப்பால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு மத்தியில் மிகுந்த அச்சத்தில் இருந்த அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால், தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் மருத்துவமனையிலிருந்து அவர் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், புதன் கிழமை பிற்பகலில் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் பாகாயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு தகவல் அளித்து அவரைக் கண்டால் மருத்துவமனையில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர்.
இதற்கிடையே சிறுகரும்பூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஏழுமலையின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று சடலத்தை மீட்ட
போலீசார் உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கொரோனா அச்சம் காரணமாக ஏழுமலை தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
Coronavirus Awareness | பெரம்பலூரில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் காவல்துறை.. ஊரடங்கை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்..
கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அஞ்ச வேண்டியதில்லை எனவும் மனதைரியத்துடன் இருந்தாலேயே கொரோனாவை வென்று விட முடியும் என்றும் நம்பிக்கை அளிக்கின்றனர் மருத்துவர்கள். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருந்து, நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். தற்கொலை எந்த பிரச்னைக்கும் முடிவல்ல என்பதை உணர்ந்தால் இதுபோன்ற இழப்புகளை தவிர்க்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
-----------------------------------------------------------------------------------------------
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.