டேபிளை உடைத்து அட்டகாசம் செய்த அரசு பள்ளி மாணவர்கள் மீது வேலூர் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை...
டேபிளை உடைத்து அட்டகாசம் செய்த அரசு பள்ளி மாணவர்கள் மீது வேலூர் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை...
அரசுப்பள்ளி மாணவர்கள்
Vellore Students Atrocity | வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மேஜை நாற்காலிகளை உடைத்த 12 மாணவர்களையும் பெற்றோர்களையும் அழைத்து நேரில் விசாரணை செய்ய செய்தார்.
வேலூரில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் உள்ள மேஜை நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அம்மாணவர்கள் மீது ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் உள்ள இரும்பிலான மேஜை நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்துகின்றனர். இதை சுற்றி மற்ற மாணவர்கள் உடைப்பதற்காக ஊக்கம் அளிக்கின்றனர் .
இந்த காட்சிகளை மற்ற மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்ட அனைவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர் ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஆசிரியரை அடிக்கப் பாய்ந்த காரணமாக மாணவர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
இந்த நிலையில் தொரப்பாடி பள்ளியில் மாணவர்கள் மேஜை நாற்காலிகளை சேதப்படுத்தும் காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பாகாயம் போலீசார் பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மேஜை நாற்காலிகளை உடைத்த 12 மாணவர்களையும் பெற்றோர்களையும் அழைத்து நேரில் விசாரணை செய்ய செய்தார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஃபேர்வெல் பார்ட்டி வைக்கவேண்டும் என்று கேட்டதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் மேஜை நாற்காலிகளை உடைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் தகவல். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மேசையை உடைத்த 12 மாணவர்களை மே 5ம் தேதி வரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
செய்தியாளர் : செல்வம் (வேலூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.