Home /News /tamil-nadu /

10-நாள் திட்டம்.. கழுத்தில் கிடந்த தங்க ருத்ராட்சம் - சிங்க முகமூடி கொள்ளையன் சிக்கியது எப்படி

10-நாள் திட்டம்.. கழுத்தில் கிடந்த தங்க ருத்ராட்சம் - சிங்க முகமூடி கொள்ளையன் சிக்கியது எப்படி

வேலூர் நகைக்கடை கொள்ளை

வேலூர் நகைக்கடை கொள்ளை

கொள்ளையன் 10 நாட்கள் திட்டமிட்டு Vellore Jos Alukkas-ல் இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ்  (Jos Alukkas) நகைக்கடை சுவரில் துளையிட்டு நகைகளை திருடிச் சென்ற கொள்ளையரை 6 நாட்களில் கைது செய்து, அவரிடம் இருந்த அனைத்து நகைகளையும் மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் செயல்படும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 14ம் தேதி நள்ளிரவு கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு சுமார் 16 கிலோ தங்க நகைகள், வைரம் பதிக்கப்பட்ட நகைகள் திருடப்பட்டன. போலீசாரிடம் சிக்காமல் இருக்க கடையில் இருந்த கேமராக்கள் மீது கொள்ளையர் ஸ்பிரே அடித்த சிசிடிவி காட்சியும் பதிவாகியிருந்தது. இதையடுத்து வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் பாபு தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையரை தேடும் பணி நடைபெற்று வந்தது.

    Also Read:  பள்ளி மாணவிகளை வீடியோ எடுத்து டார்சர் செய்த இளைஞர் - கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய மாணவிகள்

    கடையை சுற்றியிருந்த அனைத்து கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினர். கொள்ளையன்  சிங்கம் மாஸ்க் மற்றும் தலையில் விக் அணிந்து சென்றதால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் வடமாநிலத்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் ஊகித்தனர்.  அப்பகுதி முழுவதும் சாலையில் வைக்கப்பட்டிருந்த  சிசிடிவி காட்சிகளின் அங்க அடையாளங்களை வைத்தும். கைரேகை அடிப்படையில் பழைய குற்றவாளிகளை பட்டியலை வைத்தும் தனிப்படை போலீசார் குச்சிப்பாளையம் கிராமத்தை  சேர்ந்த டீக்காராமனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அதில் அவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    ஒடுக்கத்தூர் பகுதியில் சுடுகாடு பகுதியில் பதுக்கி வைத்திருந்த தங்க வைரநகைகளை எடுத்து கொடுத்தார். சுமார்  ரூ.8 கோடி மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டது. கொள்ளை போன நகைகள் நூறு சதவிகிதம் மீட்கப்பட்டுவிட்டது. இதற்காக கொள்ளையன் 10 நாட்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வளவு நகைகளை கொள்ளையடித்த அவர் ஒரு தங்க ருத்திராட்சத்தை மட்டும் கழுத்தில் அணிந்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also Read: வீட்டில் ஏசி, மோட்டருக்கு தனி ஈபி கனெக்‌ஷன் வாங்கி இருக்கீங்களா..? பியூஸ் பிடுங்க வருகிறார்கள் அதிகாரிகள்..

    இந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளியை  விரைந்து கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட படவுள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தில் யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது.  டீக்காராமன் வேறு எங்காவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என விசாரணையை துவங்கியுள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Gold, Gold Robbery, Gold Theft

    அடுத்த செய்தி