ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கு: கைரேகை மூலம் சிக்கினாரா "சிங்க முகமூடி"?

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கு: கைரேகை மூலம் சிக்கினாரா "சிங்க முகமூடி"?

நகைக்கடை கொள்ளை

நகைக்கடை கொள்ளை

வேலூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிக்காராமன் என்பவரின் உடல் அமைப்பு மற்றும் கைரேகைகளுடன் ஓரளவு ஒத்துப்போனது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வேலூரில் பிரபல நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு 15 கிலோ நகைகள் திருடப்பட்ட வழக்கில், ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் நகரின் சிஎம்சி மருத்துவமனை அருகே இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15-ம் தேதி அதிகாலை சுவற்றில் துளையிட்டு நபர் ஒருவர், முதல் தளத்திற்குள் நுழைந்தார். முதல் தளத்தில் இருந்து இரண்டாம் தளத்துக்கு சென்ற அவர், விலையுயர்ந்த வைரம், பிளாட்டினம் நகைகள் என 15 கிலோ 800 கிராம் நகைகளை திருடிச்சென்றார்.

அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தில் சிங்க முகமூடியை அணிந்திருந்த நபர் சிசிடிவி கேமிராக்களை ஸ்பிரே கொண்டு மறைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் 8 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

Also Read:  பாதுகாப்பானது தாயின் கருவறையும் கல்லறையும் தான்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி தற்கொலை

நகைக்கடையில் சேகரிக்கப்பட்ட கைரேகை தடயங்களை வைத்து போலீசார் பழைய குற்றவாளிகளை ஆராய்ந்து வந்தனர் .மேலும் கடைக்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வந்தனர். அப்போது, மெலிதான உடல் கொண்ட நபர் ஒருவர் தோளில் பையை மாட்டிக்கொண்டு பேருந்து நிலையம் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து பழைய குற்றவாளிகளின் கைரேகையை போலீசார் ஆராய்ந்தபோது, குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிக்காராமன் என்பவரின் உடல் அமைப்பு மற்றும் கைரேகைகளுடன் ஓரளவு ஒத்துப்போனது.

Also Read:  கேரளாவில் பறவைக் காய்ச்சல்: தமிழக - கேரளா எல்லையில் சோதனைகள் தீவிரம்

இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் நகைகள் திருடப்பட்ட கடைக்கு டிக்காராமை அழைத்துச்சென்ற போலீசார், சிங்க முகமூடியையும் அணிவித்து ஆராய்ந்தனர்.இந்த நிலையில் டிக்காராமனின் தாய், மனைவி ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன நகைகளில் சிலவற்றை டிக்காராமனிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Crime News, Gold Theft, Investigation, Jewelry shop