வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில்
திமுக வெற்றி பெற்று மாநகராட்சியில் பெரும் பலத்துடன் உள்ளது . மாநகராட்சியின் மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளார்.
வேலூர் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டபோது அப்போது நகரமன்றத் தலைவராக இருந்த கார்த்திகேயன் மாநகர மேயர் ஆக்கப்பட்டார். அவர் தற்போது வேலூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பின்னர் மேயராக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த கார்த்தியாயினி. இவர் நேரடியாக மக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்.
இதையும் படிங்க: திருநின்றவூரில் திமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி
தற்போது திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் மேயர் வேட்பாளராக திமுகவில் இரண்டு பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. விமலா சீனிவாசன் , புஷ்பலதா வன்னியராஜா ஆகிய இருவருக்கும் இடையே தான் போட்டி பலமாக உள்ளது. இதில் கட்சியில் மூத்த உறுப்பினராகவும் ஏற்கனவே தாராபடவேடு பேரூராட்சியில் தலைவராக பணியாற்றிய அனுபவம் புஷ்பலதாவுக்கு உண்டு .
மேலும் படிக்க: திமுக வெற்றியில் கொங்கு மண்டலத்தில் முதலிடத்தை பிடித்த கோவை
இவர் தற்போது போட்டியின்றி மாமன்ற உறுப்பினராக தேர்வானவர். அனுபவங்களும் அதிகம் நிறைந்தவர். அதே நேரத்தில் விமலா கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் குடும்பத்திற்கு விஸ்வாசமானவர் என்பதால் இவருடைய பெயரும் மேயர் வேட்பாளராக அடிபடுகிறது. ஆனால், முன் அனுபவம் கிடையாது.
இருவரில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் தற்போது மாநகராட்சியை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்: செல்வம் - வேலூர் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.