Home /News /tamil-nadu /

பாமக வேட்பாளரை கடத்தியதாக திமுகவினர் மீது புகார்... ராமதாஸ் கண்டனம்

பாமக வேட்பாளரை கடத்தியதாக திமுகவினர் மீது புகார்... ராமதாஸ் கண்டனம்

பாமக வேட்பாளர் கடத்தல் குற்றச்சாட்டு

பாமக வேட்பாளர் கடத்தல் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வேலூரில் 24வது வார்டு பாமக வேட்பாளரை தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினர் போட்டியிலிருந்து விலக வேண்டும் எனவும் இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    வேலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாமக வேட்பாளரை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடத்திச் சென்று வாபஸ் வாங்க வேண்டும் என மிரட்டியதாக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் ரங்காபுரம் நடைபாறை பகுதியை சேர்ந்தவர் பரசுராமன்.
    இவர் வேலூர் மாநகராட்சி 24 -வது வார்டில் பா.ம.க சார்பில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு திமுகவினர் பரசுராமனை கடத்திச்சென்று வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியதாக கூறப்பபடுகிறது.

    இதுகுறித்து பா.ம.க மாவட்ட செயலாளர் இளவழகன், மாநில துணைத் தலைவர் என். டி.சண்முகம் , மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பாமக வேட்பாளர்கள் 25 பேர்  வேலூர் எஸ்பி ஆபீஸில் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது பாமகவினரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் பாமவினர்க்கும் கடும் வாக்குவாதம்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது

    பின்னர் காவல்துறை கண்காணிப்பாளரிடம்  பாமகவினர் மனு அளித்தனர். அதில்,  24 வது வார்டில்  போட்டியிடும் பரசுராமனை நேரில் அழைத்து வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் எனவும், இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியுள்ளனர்.
    2 நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் நல்ல முடிவை சொல்ல வேண்டும் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.

    இதையும் படிங்க: டீ குடிப்பதற்கும் சைக்கிள் ஓட்டுவதற்குமா மக்கள் ஓட்டுபோட்டார்கள்: எடப்பாடி பழனிசாமி கேள்வி


    எனவே, பா.ம.க வேட்பாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் மிரட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கும்படி மனு அளித்தனர். இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, வேலூரில் 24வது வார்டு பாமக வேட்பாளரை தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினர் போட்டியிலிருந்து விலக வேண்டும் எனவும் இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியது கண்டிக்கத்தக்கது.

    மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்; மாறாக மிரட்ட கூடாது. பாமக வேட்பாளர் மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு உள்ளார்.

    மேலும் படிங்க: கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்ற அதிமுக வேட்பாளர்; திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு


    இவரது பதிவுக்கு தி.மு.க மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில்,  பா.ம.க வேட்பாளரை யாரும் மிரட்டவில்லை ,கடத்தவும் இல்லை . மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதால் தான் வெற்றி பெற முடியாது எனவும், திமுக சார்பில் உதய சூரியன் சின்னம் ஒதுக்க வேண்டும் வேண்டும் என எங்களை நேரில் சந்தித்து  கேட்டுக்கொண்டார். 24-வது வார்டு திமுக நிர்வாகிக்கு ஒதுக்கிய காரணத்தை அவரிடம் தெரிவித்து விட்டோம்.

    இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை .இந்த உண்மையை விசாரிக்காமல் என் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்தது ஏற்புடையது அல்ல. பா.ம.க வேட்பாளரை மிரட்டி வெற்றி பெற வேண்டிய நிலையில் திமுக எப்போதும் இருந்ததில்லை’ என்று கூறியுள்ளார்.

    செய்தியாளர்: செல்வம் - வேலூர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Local Body Election 2022, PMK, Vellore

    அடுத்த செய்தி