Home /News /tamil-nadu /

மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட திருநங்கைக்கு வாய்ப்பளித்த திமுக

மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட திருநங்கைக்கு வாய்ப்பளித்த திமுக

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு செயலாளராக பொறுப்பில் இருக்கும் கங்கா, 50 பேர் கொண்ட கலைக்குழுவை நடத்தி வருகிறார்.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு செயலாளராக பொறுப்பில் இருக்கும் கங்கா, 50 பேர் கொண்ட கலைக்குழுவை நடத்தி வருகிறார்.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு செயலாளராக பொறுப்பில் இருக்கும் கங்கா, 50 பேர் கொண்ட கலைக்குழுவை நடத்தி வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இதையும் படிங்க : ஒரு நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் இது: ப.சிதம்பரம் விமர்சனம்!
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இதன்படி இம்மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், சட்டமன்ற தேர்தலின்போது ஏற்படுத்தப்பட்ட திமுக கூட்டணி தொடர்கிறது. எதிர்த்தரப்பில் அதிமுக, பாஜக கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் வேலூரில், ஓல்டு டவுன் பகுதியை உள்ளடக்கிய 37-வது வார்டில், தி.மு.க சார்பில் கங்கா என்ற திருநங்கை கவுன்சிலர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா- இன்று 16,096 பேருக்கு பாதிப்பு

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு செயலாளராக பொறுப்பில் இருக்கும் கங்கா, 50 பேர் கொண்ட கலைக்குழுவை நடத்தி வருகிறார். தான் வெற்றி பெற்றால், தான் சார்ந்திருக்கும் திருநங்கை சமூகத்திற்கே பெருமை என்றும், 37 வார்டில் உள்ள 63 தெருக்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவேன் என்றும் கங்கா கூறியுள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Local Body Election 2022

அடுத்த செய்தி