வேலூர் மாநகராட்சியின் 37-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட 49 வயதான திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டம் வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த திருநங்கையான கங்கா நாயக் 37-வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கினார். கடந்த 2002 முதல் திமுகவில் உறுப்பினராக இருக்கிறார்.கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார். ஈமச்சடங்கு நிதி உதவியும் பெற்றுக் கொடுத்தேன் இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் எனக்கு நல்ல பெயர் உள்ளது.
இதன்காரணமாக கங்காவுக்கு திமுக தலைமை தேர்தலில் நிற்க சீட்டு வழங்கியது. இந்த நிலையில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி தி.மு.க வேட்பாளர் திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.