Home /News /tamil-nadu /

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

Pocso case | வேலூரில் பள்ளி மாணவிக்கு ஆசிரியல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூரில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் மகள் 7- ஆம் வகுப்பு படித்து வருகிறார் ( 13 வயது )நேற்று  முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி வீட்டில் உள்ள தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    Also Read: இளைஞரை திருமணம் செய்த திருநங்கையை அடித்து உதைத்த உறவினர்கள்... நெல்லையில் பயங்கரம்

    மாணவி தற்கொலைக்கு முயன்ற காரணத்தை கேட்ட பெற்றோர் அதிர்ந்து போயுள்ளனர். மேலும் இது தொடர்பாக திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறை நடத்திய விசாரணையில், 13 வயது மாணவிக்கு  அதே அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் 55 வயதான முரளி கிருஷ்ணா என்பவர் சிறுமியிடம் தொடர்ந்து தகாத முறையில் நடந்து வந்ததாகவும்.வகுப்பறையில் தனியாக அழைத்து சில்மிஷம் செய்ததாகவும். மேலும் அவரது வீட்டு முகவரியை கொடுத்து தனியாக வரும்படி வற்புறுத்தி வந்ததாகவும்  தெரியவந்துள்ளது இதனால் பயந்து போன மாணவி மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகி செய்வதறியாது நேற்று மாலை வீட்டில் இருந்த தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்த திருவலம் காவல் துறையினர்  சீக்கராஜாபுரம் பகுதியை சேர்ந்த 55 வயதான அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர் முரளி கிருஷ்ணாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் வேறேதும் மாணவிகளிடத்தில்  இது போன்று தகாத முறையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.  தன்னிடம் கல்வி கற்கும் மாணவிகளிடம் ஆசிரியரே இது போன்ற ஈனச்செயலில் ஈடுபட்டது சக பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் கோபத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    செய்தியாளர்  - செல்வம் ( வேலூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, POCSO case, School student, School Teacher, Sexual abuse, Sexual harrasment, Tamil News, Vellore

    அடுத்த செய்தி