தான் துணை பிரதமராகவும், தனது மகனை முதல்வராக்கவும் காய் நகர்த்துகிறார் ஸ்டாலின்: பகீர் கிளப்பும் அண்ணாமலை

தான் துணை பிரதமராகவும், தனது மகனை முதல்வராக்கவும் காய் நகர்த்துகிறார் ஸ்டாலின் - அண்ணாமலை

தான் துணை பிரதமராகவும், தனது மகனை முதல்வராக்கவும் காய் நகர்த்துகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கார்த்தியாயினி, வெங்கடேசன் உள்ளிட்ட திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

  இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் நோக்கத்தில் பணியாற்ற வேண்டும் பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தான் அரசியலை செய்கிறோம்.

  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து அரசியலை செய்ய எந்த பெரிய கட்சியுமில்லை.
  காங்கிரஸ் கட்சியிலும் அதிகம் குழப்பம் உள்ளது. இதனால் காங்கிரஸ் சிதறியுள்ளது. அடுத்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற முடியாது.

  Also read: அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கொடி ஏற்ற உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி: கனிமொழி

  மாநில கட்சிகளான மம்தா பானர்ஜி திமுக போன்ற கட்சிகள் தேசிய கட்சியாகும் நோக்கத்தில் உள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கனவு காண்கிறார், இந்தியாவின் துணை பிரதமராக தான் ஆகிவிட்டு, தனது மகனை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டுமென காய் நகர்த்தி வருகிறார்.

  இருந்தாலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 450 இடங்களில் பாஜக வெற்றி பெறும். மத்திய அரசின் திட்டங்களை திமுக எதிர்க்கட்சியாக குறை சொன்னது. ஆனால் இன்று திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களுக்கு சட்டமன்ற பட்ஜெட்டில் வக்காளத்து வாங்கியுள்ளது.

  திமுகவின் பொய் வாக்குறுதிகள் நூறு நாளில் வெளுத்துவிட்டது, மக்கள் நம்பி வாக்களித்து ஏமாந்துவிட்டார்கள் என்று அவர் கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது, மீண்டும் கொரோனா  பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாஜகவினரின் இந்த கூட்டம், சமூக இடைவெளியில்லாமல், விதிகளை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் - செல்வம்
  Published by:Esakki Raja
  First published: