Home /News /tamil-nadu /

ராகு கேது பெயர்ச்சி : வேலூர் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு... திரளான பக்தர்கள் பங்கேற்பு

ராகு கேது பெயர்ச்சி : வேலூர் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு... திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு

வேலூர் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு

Rahu Ketu Peyarchi 2022 | வேலூரில் சந்தான ஈஸ்வரி கோவில் மற்றும் நாகதேவதை கோவில் ஆகிய இரண்டு கோவில்களில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகங்கள் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

வேலூரில் சந்தான ஈஸ்வரி கோவில் மற்றும் நாகதேவதை கோவில் ஆகிய இரண்டு கோவில்களில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகங்கள் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

வேலூர் சேண்பாக்கம் பகுதியில் சந்தான ஈஸ்வரி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு பால் தயிர் இளநீர் உள்ளிட்டவைகளை கொண்டு ராகு கேதுவுக்கு அபிஷேகங்கள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர் .

Also Read : தாராபுரத்தில் 350 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

இதே போல் வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ நாகதேவதை அம்மன் ஆலயத்தில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்களை செய்து சிறப்பு யாகம் நடைபெற்றது.  இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த யாகத்தில் கலந்துகொண்டு ராகுகேதுவை வழிபாடு செய்தனர் இந்த யாகத்தில் 108 மூலிகைகள் மற்றும் பொருட்கள் போட்டு  சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.

செய்தியாளர் : செல்வம், வேலூர்
Published by:Vijay R
First published:

Tags: Vellore

அடுத்த செய்தி