சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்
சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்
நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Vellore Accident | வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில், விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில், விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமம் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு இன்று காலை இராமாலை பகுதியை சேர்ந்த பாபு மற்றும் அவருடன் அதே பகுதியை சேர்ந்த வினோத் - கஜேந்திரன் ஆகியோர் கூலி வேலைக்கு செல்ல சாலையை கடக்க முற்பட்டுள்ளனர். அப்பொழுது சித்தூரில் இருந்து வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியது.
இதில் 3 பேரும் தூக்கிவிசப்பட்டனர். மூவரில் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த வினோத் மற்றும் கஜேந்திரன் ஆகிய இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் பாபுவின் சடலத்துடன் அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் ராமாலை பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெறுவதாகவும் எனவே இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும், சாலை விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் குடியாத்தம் சித்தூர் திருப்பதி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பரதராமி போலீசார் சாலை விபத்தை ஏற்படுத்திய காரையும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
-செய்தியாளர்: கோபிநாத்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.